மிரட்டும் தொனியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி… செய்தி வாசிப்பாளர் சங்கம் கண்டனம்!

 

மிரட்டும் தொனியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி… செய்தி வாசிப்பாளர் சங்கம் கண்டனம்!

பிரபல டி.வி செய்திவாசிப்பாளர் வரதராஜன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அவருக்கு தெரிந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவமனையில் இடம் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “எந்த மருத்துவமனையிலும் படுக்கை இல்லை. அரசு, தனியார் மருத்துவமனையில் ஒரு பெட் கூட இல்லை. மருத்துவமனையைத் தொடர்புகொண்டால் மருத்துவமனைக்கு அழைத்து வராதீர்கள் என்கிறார்கள். எங்களால் சிகிச்சை அளிக்க முடியாது என்கிறார்கள். மருத்துவமனை உரிமையாளர், எம்.டி என எல்லோரிடமும் பேசினோம். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை என குறிப்பிட்டிருந்தார். இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கைகள் உள்ளன. பேரிடர் காலத்தில் வரதராஜன் தவறான கருத்தை வெளியிட்டுள்ளார்; அவர் மீது தொற்றுநோய் சட்டப்பிரிவின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மிரட்டும் தொனியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி… செய்தி வாசிப்பாளர் சங்கம் கண்டனம்!

இந்த நிலையில் வரதராஜன் மீது தொற்று நோய் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டும் தொனியில் அமைச்சர் பேட்டி அளித்திருப்பது கருத்து சுதந்திரத்திற்கு விடப்படும் சவால் என்று கருதி செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் சார்பில் கண்டம் தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூகத்தில் நற்பெயருடன் விளங்கி வரும் வரதராஜன் மீதான நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், தமிழக முதல்வர் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் தமிழக செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.