“பாஜகவின் வெற்றி பரிசாக ஆளூர் ஷாநவாஸ் மரண செய்தி விரைவில் வரும்” : பாஜக நிர்வாகியின் சர்ச்சை பதிவு!

“பாஜகவின் வெற்றி பரிசாக ஆளூர் ஷாநவாஸ் மரண செய்தி விரைவில் வரும்” : பாஜக நிர்வாகியின் சர்ச்சை பதிவு!

தமிழகத்தில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் மு.க. ஸ்டாலின் வருகின்ற 7ம் தேதி தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அக்கூட்டணியில் இடம்பெற்ற பாஜக நான்கு இடங்களில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைய உள்ளது.

“பாஜகவின் வெற்றி பரிசாக ஆளூர் ஷாநவாஸ் மரண செய்தி விரைவில் வரும்” : பாஜக நிர்வாகியின் சர்ச்சை பதிவு!

இந்த சூழலில் தஞ்சை தெற்கு பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் முகநூல் பக்கத்தில், “மே 22 ஆயிரத்து 21 வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்க படவேண்டிய பொன் நாள். தமிழிசை அவர்களின் மந்திரமாய் முழங்கிய தாமரை மலர்ந்தே தீரும் என்பதற்கிணங்க இன்று தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது. இக்காலத்தில் பணியாற்றிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும், கட்சியின் உண்மை தொண்டர்களுக்கும், கூட்டணி நிர்வாகிகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றியை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். உங்கள் அனைவருக்கும் வெற்றிப் பரிசாக ஆளூர் ஷாநவாஸ் மரண செய்தி விரைவில் வரும் என நினைக்கிறேன் “என்று சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார்.

“பாஜகவின் வெற்றி பரிசாக ஆளூர் ஷாநவாஸ் மரண செய்தி விரைவில் வரும்” : பாஜக நிர்வாகியின் சர்ச்சை பதிவு!

இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில் வழக்கம்போல பாஜகவை வலைதளவாசிகள் சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்தனர்.இதையடுத்து பாஜக இளைஞரணி தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர், தனது பதிவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், என்னுடைய முகநூலில் நான் எழுதியிருந்த ஆளூர் ஷாநவாஸ் அவர்களைப் பற்றிய பதிவு அவருடைய பெயரை தவறுதலாக பதிவிட்டு விட்டேன். தமிழன் பிரசன்னா அவர்களின் ட்விட்டர் பதிவை முன்னிறுத்தி எழுதிய பதிவில் ஷாநவாஸ் என்று தவறுதலாக பதிவிட்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

“பாஜகவின் வெற்றி பரிசாக ஆளூர் ஷாநவாஸ் மரண செய்தி விரைவில் வரும்” : பாஜக நிர்வாகியின் சர்ச்சை பதிவு!

நான் யாருக்கும் கொலை மிரட்டல் விடுக்கவில்லை. தமிழன் பிரசன்னா அவர்களின் பதிவை ஒட்டி அப்படி எழுதி இருந்தேன் .இதற்கு முன் நான் எப்போதும் யாரும் புண்படும்படி எழுதி ஏதுமில்லை. வருந்துகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனிடையே நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.