“குத்த கூடாத இடத்திலெல்லாம் இரும்பு கம்பியால் குத்தினார்கள்” -சூனியம் இருப்பதாக பெண்ணுக்கு நடந்த சோதனை.

“குத்த கூடாத இடத்திலெல்லாம் இரும்பு கம்பியால் குத்தினார்கள்” -சூனியம் இருப்பதாக பெண்ணுக்கு நடந்த சோதனை.

வாழ்க்கையில் பிரச்சைனைக்கு தீர்வு காண ஒரு பெண் ஒரு சூனியக்காரியிடம் சென்ற போது, அவரின் உடலின் பல இடங்களில் சூடான இரும்பு கம்பியால் குத்தி கொடுமை செய்யப்பட்டார் .

“குத்த கூடாத இடத்திலெல்லாம் இரும்பு கம்பியால் குத்தினார்கள்” -சூனியம் இருப்பதாக பெண்ணுக்கு நடந்த சோதனை.

ராஜஸ்தானின் அஜ்மீரின் பில்வாராவில் ஒரு 40 வயதான பெண்ணுக்கு குடும்பத்திலும் வாழ்க்கையிலும் பல பிரச்சினைகள் இருந்தன .அதனால் அந்த பெண் அந்த ஊரிலுள்ள சூன்யம் எடுப்பவர்களிடம் சென்று தன்னுடைய குறையை முறையிட்டார் .அந்த பெண்ணின் குறையை கேட்ட சூனியக்கார பெண் சந்தோஷி தேவி அவர் உடலில் யாரோ சிலர் சூனியம் வைத்திருப்பதாக கூறினார் .அதனால் அந்த சூனியத்தினை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு 1000 ரூபாய் பணம் தரவேண்டுமென்றும் கூறினார் .
அதற்கு சம்மதம் தெரிவித்த அந்த பெண்ணின் உறவினர்கள் அவரை கூட்டிக்கொண்டு அந்த சந்தோஷுதேவியிடம் மறுநாள் வந்தார்கள் .அப்போது அந்த பெண்ணை அந்த சூனியக்காரி படுக்கவைத்தார் .அதன் பிறகு சில பூஜைகள் செய்தார் .பின்னர் பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பியை எடுத்து அந்த பெண்ணின் உடல் முழுவதும் குத்தினார் .
அதன் காரணமாகஅந்த பெண் வலியால் துடித்தார் .அதன் பிறகு அந்த பெண்ணுக்கு உடலிலுள்ள அனைத்து பாகங்களிலும் தீக்காயம் ஏற்பட்டது . சூடான இரும்பினால் குத்தப்பட்ட பின்னர் அந்த பெண் மயக்கம் அடைந்ததால் ஷாஹ்புரா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் பில்வாராவில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இந்த சம்பவம் ஷாப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்டியா கிராமத்தில் உள்ள கோவிலில் நடந்துள்ளது.
இதற்கிடையில், அந்த பெண்ணின் உறவினர்கள் உட்பட மூன்று பேர் மீது போலீசார் சூனிய வேட்டை தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

“குத்த கூடாத இடத்திலெல்லாம் இரும்பு கம்பியால் குத்தினார்கள்” -சூனியம் இருப்பதாக பெண்ணுக்கு நடந்த சோதனை.