வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களுக்கு மணமக்கள் கொடுத்த சர்பிரைஸ்.. அப்படி என்ன தான் கொடுத்தாங்க?!

 

வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களுக்கு மணமக்கள் கொடுத்த சர்பிரைஸ்.. அப்படி என்ன தான் கொடுத்தாங்க?!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பல திருமணங்கள் எளிமையாகவே நடந்து முடிந்து விடுகின்றன. அதே போல தேனியை சேர்ந்த ராமலிங்கம் மற்றும் மதுமிதா தம்பதிக்கும் தேனி பெத்தாச்சி விநாயகர் கோயிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. மக்கள் யாரையும் அழைக்க முடியாததால், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புபவர்கள் மணமகன் வீட்டுக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் பலர் மணமக்கள் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களுக்கு மணமக்கள் கொடுத்த சர்பிரைஸ்.. அப்படி என்ன தான் கொடுத்தாங்க?!

அப்போது மணமக்கள் வாழ்த்து சொல்ல வந்தவர்களுக்கு மாஸ்க், சானிடைசர், அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட உள்ளிட்ட பொருட்களை கொடுத்து அசத்தியுள்ளனர். இது குறித்து பேசிய மணமக்கள், ஊரடங்கால் யாரையும் அழைக்க முடியவில்லை. வழக்கமாக திருமணங்களில் தாம்பூல பை கொடுப்பது போல ஊரடங்கில் தவிக்கும் மக்களுக்கு உதவும் விதமாக சானிடைசர், மாஸ்க் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொடுக்க முடிவு செய்தோம். தாம்பூல பைக்கு ஆகும் செலவை விட குறைவு தான். இப்படி கொடுத்தது எங்களுக்கு மன நிறைவாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.