கங்கையில் மிதந்த குழந்தை! யோகி ஆதித்யநாத்தின் அதிரடி முடிவு

 

கங்கையில் மிதந்த குழந்தை! யோகி ஆதித்யநாத்தின் அதிரடி முடிவு

பிறந்து 21 நாட்களே ஆன பெண் குழந்தை ஒரு பெட்டியில் வைத்து அடைக்கப்பட்டு கங்கை நதியில் விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கங்கையில் மிதந்த குழந்தை! யோகி ஆதித்யநாத்தின் அதிரடி முடிவு

கங்கை ஆற்றில் கொரோனா சடலங்கள் மிதந்து வந்த நிகழ்வுகளுக்குப், பிறகு இப்போது கங்கைக் கரை மணலில் புதைக்கப்பட்ட ஏராளமான உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தில் கங்கை ஆற்றில் மரப்பெட்டி ஒன்று மிதந்து வந்தது. அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் பிறந்து 21 நாட்களே ஆன பெண் குழந்தை இருந்தது. குழந்தையுடன் இந்து கடவுளின் புகைப்படங்களும் இருந்ததாக சொல்லப்படுகிறது. குழந்தையின் சட்டம் கேட்டு நதியிலிருந்து இந்தப் பெட்டியை அப்பகுதியிலிருந்த மக்கள் சிலர் எடுத்து வந்ததாகவும் அவர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

குழந்தையின் வளர்க்கும் பொறுப்பை உத்திரபிரதேச அடுத்து எடுத்துக்கொள்வதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அந்த குழந்தை கங்கை நதியில் இருந்து எடுக்கப்பட்டதால் அதற்கு‘கங்கா’ என பெயரிடப்பட்டுள்ளது.