Home அரசியல் மியான்மர் ராணுவத்திற்கு எதிராக முதல் நாடாக நடவடிக்கை எடுத்த நியூஸிலாந்து!

மியான்மர் ராணுவத்திற்கு எதிராக முதல் நாடாக நடவடிக்கை எடுத்த நியூஸிலாந்து!

சில தினங்களுக்கு முன் மியான்மர் நாட்டில் ராணுவம் மக்களாட்சியைக் கவிழ்த்தது. தேர்தலில் முறைகேடு செய்து ஆங் சான் சூகியின் கட்சி வெற்றிபெற்றதே ஆட்சிக்கவிழ்ப்புக்கு காரணமாகக் கூறியது ராணுவம். ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைக் கைதுசெய்து, இணைய சேவையை முடக்கிவைத்துள்ளது. நியாயமான முறையில் மீண்டும் தேர்தல் நடத்தி வெற்றிபெறும் கட்சியிடம் ஆட்சியை ஒப்படைப்பதாகக் கூறியுள்ளது.

மியான்மர் ராணுவத்தின் இந்தச் செயல்பாடு உலக நாடுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகளும் ஐநாவில் முறையிட்டுவருகின்றன. இச்சூழலில் நியூஸிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் மியான்மர் ராணுவத்தை சரமாரியாக விமர்சித்திருக்கிறார். குறிப்பாக, அந்நாட்டுடனான அரசியல், ராணுவ உறவுகளை முறித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் மியான்மர் ராணுவத்தைத் திட்டினாலும், நியூஸிலாந்து மட்டுமே முதன்முறையாக நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இதுதொடர்பாகப் பேசியுள்ள அவர், “பல ஆண்டுகளாகப் போராடி மியான்மரில் மக்களாட்சியைக் கொண்டுவந்துள்ளனர். ஆனால் அந்நாட்டின் ராணுவம் ஒரு நாளில் ஆட்சியைக் கழித்தது மிக்க வேதனையளிக்கிறது. இதுகுறித்து நிச்சயம் ஐநாவின் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நியூசிலாந்து சார்பில் மியான்மரில் சுமார் 30.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை அந்நாட்டு ராணுவத்திற்குச் செல்வதில்லை என்பதை உறுதி செய்யப்பட்டவுடன் அத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்றார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

அதிமுக சார்பில் 8240 பேர் விருப்பமனு தாக்கல்! இன்று ஒரே நாளில் 8,174 பேர் மனுதாக்கல்

அதிமுகவில் கடந்த மாதம் 24ஆம் தேதி அன்று விருப்பமனு தாக்கல் தொடங்கியது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் விருப்பமனு தாக்கல் செய்யும் காலத்தை குறைத்து, மார்ச்3ம் தேதி அன்றுதான் கடைசி...

ஸ்டாலின் தான் வராரு போர்டு கடைகளில் வைத்து கொள்ள அனுமதி முக ஸ்டாலின்

ஸ்டாலின் தான் வராரு போர்டுகளை வைத்துக் கொள்ள தேர்தல் கமி‌ஷனரிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு தேர்தல் கமி‌ஷன் அனுமதி அளித்துள்ளது. தி.மு.க. எவ்வாறு தேர்தல் பணிகள்,...

மதுரை அருகே பாம்பு கடித்து, 10 வயது சிறுவன் பலி!

மதுரை மதுரை அருகே தோட்டத்தில் விஷப்பாம்பு தீண்டியதில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அடுத்த பணமூப்பன்பட்டி...

கோடையில் நீரிழப்பு பிரச்சினையை தவிர்க்க, இதை குடிங்க போதும்!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கால கட்டத்தில், நோய் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, பலரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை கடைபிடித்து...
TopTamilNews