இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainஇரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

india
india

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிவரும் டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.

ind

இன்றைய போட்டியில் இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் போட்டியில் களமிறங்கிய அதே இந்திய அணி இன்றைய போட்டியிலும் களம் இறங்குகிறது. 

அதேபோல், நியூசிலாந்து அணியிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அதே அணி களம் இறங்குகிறது. 

nz team

சென்றமுறை நியூசிலாந்து அணி 200 ரன்களுக்கு மேல் அடித்தும் இந்திய அணி அபாரமாக சேஸ் செய்து வெற்றியை கண்டது. ஆதலால் இன்றைய மைதானமும் பேட்டிங்கில் சாதகமாக இருப்பதால் நிச்சயம் 210 முதல் 220 ரன்கள் வரை முதலில் பேட்டிங் செய்து டார்கெட் வைத்தால் மட்டுமே நியூஸிலாந்து அணியால் வெற்றியை பெற முடியும்.

இந்திய அணி வீரர்கள் பட்டியல்:

india

ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல் (கீப்பர்), விராட் கோஹ்லி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ஷார்துல் தாகூர், ஜஸ்பிரீத் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி.

நியூசிலாந்து வீரர்கள் பட்டியல்:

nz team

மார்ட்டின் குப்டில், கொலின் மன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிம் சீஃபர்ட் (கீப்பர்), ரோஸ் டெய்லர், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, பிளேர் டிக்னர், ஹமிஷ் பென்னட்

2018 TopTamilNews. All rights reserved.