மீண்டும் நியூசிலாந்தில் கொரோனா – வெளிநாடு சென்று வந்த 2 பெண்களுக்கு நோய்த் தொற்று உறுதி

 

மீண்டும் நியூசிலாந்தில் கொரோனா – வெளிநாடு சென்று வந்த 2 பெண்களுக்கு நோய்த் தொற்று உறுதி

ஆக்லாந்து: கொரோனா பாதிப்பில் இருந்து முற்றிலும் மீண்டதாக அறிவிக்கப்பட்ட நியூசிலாந்து நாட்டில் புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்து நாட்டின் கடைசி கொரோனா நோயாளி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டதை முன்னிட்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் கூட இல்லாத நாடு என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றிருந்தது. கொரோனா தொற்றுநோயை நியூசிலாந்து கையாண்ட விதம் மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. அந்த நாட்டில் ஏழு வாரங்கள் கடும் பொதுமுடக்கம் அமலில் இருந்தது.

மீண்டும் நியூசிலாந்தில் கொரோனா – வெளிநாடு சென்று வந்த 2 பெண்களுக்கு நோய்த் தொற்று உறுதி

இந்நிலையில், அந்நாட்டில் புதிதாக இருவருக்கு நியூசிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து நியூசிலாந்துக்கு வந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 24 நாட்களுக்கு பிறகு நியூசிலாந்தில் முதன்முறையாக மீண்டும் கொரோனா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் கொரோனா இல்லாத நாடு என்ற பெருமையை தற்காலிகமாக நியூசிலாந்து இழந்துள்ளது.