கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நியூசிலாந்து – கடைசி கொரோனா நோயாளி குணமானார்

 

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நியூசிலாந்து – கடைசி கொரோனா நோயாளி குணமானார்

ஆக்லாந்து: கடைசி கொரோனா நோயாளி குணமானதால் நியூசிலாந்து நாடு கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டது.

நியூசிலாந்து நாட்டின் கடைசி கொரோனா நோயாளி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் கூட நியூசிலாந்தில் செயல்பாட்டில் இல்லை என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா தொற்றுநோயை நியூசிலாந்து கையாண்ட விதம் மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. அந்த நாட்டில் ஏழு வாரங்கள் கடும் பொதுமுடக்கம் அமலில் இருந்தது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நியூசிலாந்து – கடைசி கொரோனா நோயாளி குணமானார்

“பிப்ரவரி 28-க்குப் பிறகு முதன்முறையாக எந்தவொரு கொரோனா வழக்கும் செயல்பாட்டில் இல்லாதது நிச்சயமாக நியூசிலாந்தில் வரலாற்று சாதனையாகும். ஆனால் கொரோனா தொற்றுக்கு எதிராக தொடர்ந்து விழிப்புணர்வு அவசியம்” என்று சுகாதாரத் துறை இயக்குநர் ஜெனரல் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் கூறினார். நியூசிலாந்தில் 1,154 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதில் 22 பேர் உயிரிழந்தனர். கடந்த 17 நாட்களாக நியூசிலாந்தில் புதிய கொரோனா நோய்த்தொற்று பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை.