நியூயார்க்கில் கொரோனாவால் பலியாவோர் எண்ணிக்கை முதன்முறையாக 100-க்கு கீழ் குறைந்தது

 

நியூயார்க்கில் கொரோனாவால் பலியாவோர் எண்ணிக்கை முதன்முறையாக 100-க்கு கீழ் குறைந்தது

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாவோர் எண்ணிக்கை 100-க்கு கீழ் குறைந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக 97,048 பேர் இறந்துள்ளனர். மேலும், இதுவரை 16 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 4 லட்சத்து 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தாக்கத்தில் இருந்து பிழைத்து வந்துள்ளனர். இன்னும் ஓரிரு தினங்களில் அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து விடும்.

நியூயார்க்கில் கொரோனாவால் பலியாவோர் எண்ணிக்கை முதன்முறையாக 100-க்கு கீழ் குறைந்தது

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் தான் கொரோனா வைரஸ் தொற்று ருத்ர தாண்டவம் ஆடியுள்ளது. அங்கு இதுவரை 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். மேலும் 3 லட்சத்து 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நியூயார்க்கில் கொரோனாவால் 84 பேர் இறந்துள்ளனர். மார்ச் 24-ஆம் தேதியில் இருந்து பார்த்தால் நியூயார்க் நகரில் முதன்முறையாக கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 100-க்கு கீழ் சென்றுள்ளது.