“அவன் கொல்லப்பட்ட காரணம் தெரியவில்லை” – நண்பன் நினைவாக கட்டு கட்டாக பணத்தை தூக்கியெறிந்த நபர்!

 

“அவன் கொல்லப்பட்ட காரணம் தெரியவில்லை” – நண்பன் நினைவாக கட்டு கட்டாக பணத்தை தூக்கியெறிந்த நபர்!

பணம் பத்தும் செய்யும் என்பார்கள். பணம் என்றால் புணமும் வாய் திறக்கும் என்றும் கூட சொல்வார்கள். ஆனால் அந்தப் பணத்தைக் கொண்டு நிம்மதியை விலைக்கு வாங்க முடியாது என்று சிம்பிளாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முத்து படத்தில் முடித்துவிட்டார். பணத்தின் அவசியம் என்ன என்பது மிட்டாய் வாங்க வேண்டும் காசு கொடு என்று கேட்கும் சிறு குழந்தைக்கும் தெரிந்திருக்கிறது. அப்படிப்பட்ட பணத்தை தூக்கி வீசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர்.

“அவன் கொல்லப்பட்ட காரணம் தெரியவில்லை” – நண்பன் நினைவாக கட்டு கட்டாக பணத்தை தூக்கியெறிந்த நபர்!

சமீபத்தில் நியூயார்க் சதுக்கத்தில் நபர் ஒருவர் பணத்தைத் தூக்கி வீசியதும், அந்தப் பணத்தை மக்கள் பொறுக்குவதுமாக ஒரு வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் பெரிய வைரலானது. அந்த வீடியோவில் சில விஷயங்களைச் சொல்லிக்கொண்டே பணத்தை வீசியெறிந்தார். அதில் பேசிய அவர், “ஒரு வருடத்திற்கு முன்னர் எனது நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அவரின் பெயர் ஜோ குஷ். பணம் சம்பாதிப்பதில் சிறந்தவர். அவர் கொல்லப்பட்டார். ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை. நான் அவரை நினைவுகூர விரும்புகிறேன்” என்றார்.

“அவன் கொல்லப்பட்ட காரணம் தெரியவில்லை” – நண்பன் நினைவாக கட்டு கட்டாக பணத்தை தூக்கியெறிந்த நபர்!

இதுதொடர்பாக ஆராய்ந்ததில் ஜோ குஷ் அமெரிக்காவைச் சேர்ந்த இசைக் கலைஞர் என்பதும் அவர் திடீரென்று உயிரிழந்ததும் தெரியவருகிறது. குறிப்பாகப் பணத்தை வீசியெறிந்த அந்த நபர் நகைக்கடை உரிமையாளர் என்பதையும், அவரது கடைக்கு அடிக்கடி வரும் வாடிக்கையாளராக ஜோ குஷ் இருந்துள்ளார் என்பதையும் அறியமுடிகிறது.

வீடியோவின் இறுதியில் ஜோ குஷ் உயிரோடு இருக்கும்போது பணத்தை தூக்கியெறிகிறார்

இதனால் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். மேலும் தான் சம்பாரிக்கும் பணத்தை மக்களுக்கு இலவசமாகக் கொடுக்கும் வகையில் ஜோ குஷ் நியூயார்க் சதுக்கத்தில் தூக்கி எறிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த வருடம் அவரது நினைவாக அவரது நண்பர் சதுக்கத்தில் பணத்தை வீசியிருக்கிறார். நட்பிற்கு இலக்கணமாகவும் விளங்குகிறார்.