விதி மீறி புத்தாண்டு கொண்டாட்டம் – 262 பைக்குகள் பறிமுதல்!

விதி மீறி புத்தாண்டு கொண்டாட்டம் – 262 பைக்குகள் பறிமுதல்!

விதி மீறி புத்தாண்டு கொண்டாட்டம் நடத்தியதின் எதிரொலியாக 262 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விதி மீறி புத்தாண்டு கொண்டாட்டம் – 262 பைக்குகள் பறிமுதல்!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

விதி மீறி புத்தாண்டு கொண்டாட்டம் – 262 பைக்குகள் பறிமுதல்!

கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டதுடன் நட்சத்திர ஹோட்டல், கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை இரவு 10 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டது. அதேபோல் சென்னை கடற்கரை சாலையில் முற்றிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. பைக் ரேஸ் மற்றும் விபத்துகளை தடுக்கும் விதமாக சென்னையிலுள்ள மேம்பாலங்கள் இரவு மூடப்பட்ட நிலையில் தடையை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

விதி மீறி புத்தாண்டு கொண்டாட்டம் – 262 பைக்குகள் பறிமுதல்!

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் விதிகளை மீறி புத்தாண்டு கொண்டாடியதால் 262 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதி வேகமாக வாகனங்களை இயக்குதல் , 3 பேர் செல்லுதல் உள்ளிட்ட அத்துமீறல் தொடர்பாக 741 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.