புத்தாண்டு கொண்டாட தடை : மீறினால் வாகனங்கள் பறிமுதல்!

 

புத்தாண்டு கொண்டாட தடை : மீறினால் வாகனங்கள் பறிமுதல்!

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட தடை : மீறினால் வாகனங்கள் பறிமுதல்!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா சூழலை பொறுத்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த முயலுங்கள் என்றும் இன்றும், நாளையும் சூழலைப் பொருத்து கட்டுப்பாடு விதிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

புத்தாண்டு கொண்டாட தடை : மீறினால் வாகனங்கள் பறிமுதல்!

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா காரணமாக கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காவல்துறை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. நட்சத்திர ஹோட்டல், கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை இரவு 10 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை கடற்கரை சாலையில் முற்றிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பைக் ரேஸ் மற்றும் விபத்துகளை தடுக்கும் விதமாக சென்னையிலுள்ள மேம்பாலங்கள் இரவு மூடப்படும் என்றும் உணவகங்கள் 10 மணிக்கு மேல் செயல்பட அனுமதியில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தசென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 300 சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபடவுள்ளனர்.