முகா – அமெரிக்க வாழ் தமிழர் உருவாக்கிய புதிய வீடியோ சாட் தளம்!

 

முகா – அமெரிக்க வாழ் தமிழர் உருவாக்கிய புதிய வீடியோ சாட் தளம்!

கொரோனாவிற்குப் பிறகு உலகத்தின் வழக்கங்களில் பல மாறிவிட்டன. வீட்டை விட்டு வெளியே செல்வதை முடிந்தளவு குறைக்க வேண்டும் என்பதே அடிப்படை விஷயமாயிற்று. அதனால், ஆன்லைனின் பரிமாற்றம் வைத்துக்கொள்ளாத பலரும் கட்டாயம் இயங்க வேண்டியதாயிற்று.

வொர்க் ஃப்ரம் ஹோம் என்பது மிக இயல்பான ஒன்றாகி விட்டது. அதனால், அலுவலகம், சக பணியாளர்கள் மீட்டிங் என்பது வீடியோ கான்பிரன்ஸிங் என்பது மட்டுமே ஒரே வழி. மேலும், இலக்கிய கூட்டம், அரசியல் சந்திப்புகள், குடும்பத்தினர் சந்திப்பு என வீடியோ சாட்டிங் அதிகரித்து வருகிறது.

முகா – அமெரிக்க வாழ் தமிழர் உருவாக்கிய புதிய வீடியோ சாட் தளம்!

இதற்காக பல வழிகளில் உதவும் ஒரு தளத்தை உருவாக்கியிருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த டெல் கணேசன்.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கைபா இன்னோவேஷன்ஸ் நிறுவனம், அடுத்த தலைமுறைக்கான காணொலி சந்திப்பு தளளமாக முகாவை உருவாக்கியுள்ளது.

முகா – அமெரிக்க வாழ் தமிழர் உருவாக்கிய புதிய வீடியோ சாட் தளம்!

இந்தத் தளத்தை முழுமையாக வடிவமைத்தது இந்தியாவில் உள்ள கணினி டெக்னாலஜி குழுதானாம். இந்த தளத்திற்கு முகா என்று பெயர் வைத்த காரணத்தைச் சொல்கிறார் டெல் கணேசன், ’ முகா என்ற பெயர் முகம் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து பெற்றுள்ளோம். முகம் பார்த்து பேசும் காணொலி தளம் என்பதால் இப்பெயரை இறுதி செய்தோம்’.

முகா அப்ளிகேசன் வழியாக, சந்திப்பு நடக்கும்போதே அச்சந்திப்பை யூடியூப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் நேரலை செய்யவும் வசதி உள்ளது.

இதை உருவாக்கிய கைபா நிறுவனத்தின் இயக்குநர் டெல் கணேசன், ஹாலிவுட்டில் மூன்று திரைப்படங்களை எடுத்தவர்.