இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

 

இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

நாடு முழுவதும் உருமாறிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது.

பிரிட்டனில் அதிவேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியா- பிரிட்டன் விமான சேவைக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதிக்கும் முன்னரே, அங்கிருந்து வந்தவர்கள் மூலமாக இந்த கொரோனா பரவத் தொடங்கியது. முதலில் 6 பேருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா பரவியிருந்த நிலையில், கிட்டத்தட்ட ஒரே வாரத்தில் 60க்கும் மேற்பட்டோருக்கு பரவியது.

இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

உருமாறிய கொரோனா வைரஸ், 70% அதிவேகமாக பரவும் தன்மையை கொண்டிருப்பதே இதற்கு காரணம். இதனை தடுக்க மத்திய அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலிலும் பாதிப்பு, அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனிடையே, இன்று முதல் பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பீதியை அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு 82 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே 71 பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்தது. இன்று மேலும் 11 பேருக்கு உறுதியானதால் பாதிப்பு உயர்ந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.