சமையல் வேலையைக் குறைக்கும் புது வகை “குழம்புபொடி”கள் – பெண்களுக்கும் ‘பேச்சிலர்’ ஆண்களுக்கும் மகிழ்ச்சி செய்தி

 

சமையல் வேலையைக் குறைக்கும் புது வகை “குழம்புபொடி”கள் – பெண்களுக்கும் ‘பேச்சிலர்’ ஆண்களுக்கும் மகிழ்ச்சி செய்தி

தாய்மார்களே…உங்களை சற்று பின்னோக்கிப் பாருங்கள். ஒரு காலத்தில் உங்களுக்கு சமையல் வேலை எவ்வளவு இருந்தது தெரியுமா? மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்திற்கு வேலை பார்க்க வேண்டியிருந்தது., நெல்லோ,கேழ்வரகோ உரலில் போட்டு குத்த வேண்டும். அவற்றில் கல் பார்க்க வேண்டும். தவிடு புடைக்க வேண்டும். தோசை, இட்லிக்கு மாவாட்ட வேண்டும்.மசாலாப் பொருட்களை அம்மியில் வைத்து அரைக்க வேண்டும்.விறகடுப்பில் சாதம் சமைக்க வேண்டும்.எலுமிச்சை, நார்த்தங்காய் ஆகியவற்றை நறுக்கி ஊறப்போட்டு ஊறுகாய் தயாரிக்க வேண்டும். மாவறைத்து, கூழ் காய்ச்சி மாடியில் வடாம் காயப்போட்டு எடுக்க வேண்டும்.அப்பப்பா…ஒரு கட்டத்தில் இவையெல்லாம் மாறிப்போயின.
சுத்தமான அரிசி தயாராகி கிலோ கணக்கிலான பைகள் கடைகளுக்கு வந்தன.மாவாட்ட கிரைண்டர் வந்தது. மசாலா அரைக்க மிக்சி வந்தது.சாதம் பொங்க குக்கர் வந்தது. அடுப்புகள் கியாஸ் மற்றும் மின்சார அடுப்புகளாக மாறின. அடுத்த கட்டமாக தோசை மாவோ அல்லது இட்லி மாவோ வீட்டில் அரைக்க வேண்டாம்.

சமையல் வேலையைக் குறைக்கும் புது வகை “குழம்புபொடி”கள் – பெண்களுக்கும் ‘பேச்சிலர்’ ஆண்களுக்கும் மகிழ்ச்சி செய்தி

அவை மாவாகவே விற்பனைக்கு வந்தன.வடாமும், ஊறுகாயும் பாக்கெட்டுகளில் வந்தன. இதில் மிக்சியின் பயன்பாடு கூட குறைந்தது. மிளகாய் பொடி, கொத்தமல்லிப் பொடி,.மஞ்சள் பொடி, மட்டன் மற்றும் கோழி மசாலாப் பொடி, முட்டை மசாலாப் பொடி, மிளகுப் பொடி,ரசப் பொடி,இஞ்சி பூண்டு பேஸ்ட், பெருங்காயப் பவுடர் என எல்லாமே பவுடர் வடிவத்தில் 10 ரூபாய்க்கு பாக்கெட்டுகளாக கிடைக்க ஆரம்பித்து விட்டன.ஆனால்..இத்தனை வசதி வாய்ப்புகள் பெருகியும் கூட அந்தக்காலத்துப் பெண்களை விட உங்களுக்கு இடுப்பு வலியும் சமையல் வேலையில் அலுப்பும் அதிகம் வருவது ஏன் என்று ஆண்களுக்குத் தெரியவில்லை.

சமையல் வேலையைக் குறைக்கும் புது வகை “குழம்புபொடி”கள் – பெண்களுக்கும் ‘பேச்சிலர்’ ஆண்களுக்கும் மகிழ்ச்சி செய்தி


இருக்கட்டும்.. இதில் அடுத்தகட்ட விசேசமாக உங்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி வந்திருக்கிறது. இனி காய்கறிகளை சற்று வேக வைப்பது மட்டும்தான் உங்களுக்கு வேலை. அவ்வளவுதான் சமையல் வேலை முடிந்து விடும்.. ஆமாம்..அரிசியை குக்கரில் வைத்து விட்டு 4 விசில் வரும் வரை வீட்டு நடு ஹாலில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்து திரும்பினால் சாதம் தயாராகி விடும். அடுத்த கட்டமாக காய்கறிகளை குக்கரில் போட்டு 4 விசில் வரும் வரை அடுத்த தொடர் ஒன்றைப் பார்த்தால் இன்றைய சமையல் வேலை அனைத்துமே முடிந்தது..
“யெஸ்…” முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் சமையலுக்குத் தேவையான அனைத்தையும் பொடிகளாகத் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவதில் வேகம் காட்டி வருகின்றன. ஏற்கெனவே சாம்பார் பொடி, ரசப் பொடி,வத்தக் குழம்பு ஆகியவை வந்த நிலையில் தற்போது மோர்க்குழம்பு பொடி,வெஜிடபிள் பொறியல் பொடி, கும்பகோணம் கடப்பா சாம்பார் பொடி, கறிவேப்பிலைப் பொடி, காய்கறி அவியல் பொடி, தக்காளி சாதப் பொடி, லெமன் ரைஸ் பொடி, புளியோதரை பொடி,உளுந்தம் பருப்பு சாதப் பொடி,மிளகு சாதப் பொடி என வரிசையாக ஏராளமான பொடிகள் விற்பனைக்கு வந்த வண்ணம் இருக்கின்றன..

சமையல் வேலையைக் குறைக்கும் புது வகை “குழம்புபொடி”கள் – பெண்களுக்கும் ‘பேச்சிலர்’ ஆண்களுக்கும் மகிழ்ச்சி செய்தி


இந்தப் பொடிகளை வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்தால் போதும். சமையல் வேலை முடிந்தது. இன்னும் பல பொடிகளை நீங்கள் அன்றைய தினம் சமைக்கவே வேண்டாம்.. சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பொடிகளைப் போட்டு பிசைந்து சாப்பிட்டு விடலாம்.
இளம் பெண்களே..திருமணமாகி புகுந்த வீடு செல்லும் மணமகள்களே.. சமையல் வேலையெல்லாம் முன்பைப் போல் அம்மா, பாட்டியிடம் கத்துக்கிட வேண்டாம்..அடுப்பை பத்த வையுங்க காய்கறிகளை வேகப் போடுங்க.. பொடியை கலக்குங்க..போயிகிட்டே இருங்க..
பின்குறிப்பு: பேச்சிலராக இருக்கும் ஆண்களுக்கு இந்த சமையல் பொடிகள் பெரும் வரப்பிரசாதமாகும்.