புதிய வகை கொரோனா வைரஸ் – செளம்யா சாமிநாதனின் எச்சரிக்கை

 

புதிய வகை கொரோனா வைரஸ் – செளம்யா சாமிநாதனின் எச்சரிக்கை

கொரோனாவால் இன்னொரு பெரிய பிரச்சனையில் உலகம் சிக்கித் தவிக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 77 லட்சத்து 40 ஆயிரத்து 380 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 46 லட்சத்து 19 ஆயிரத்து 686 நபர்கள்.

புதிய வகை கொரோனா வைரஸ் – செளம்யா சாமிநாதனின் எச்சரிக்கை

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 17 லட்சத்து 09 ஆயிரத்து 474 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,14,11,220 பேர்.

கொரோனாவின் தாக்குதலே இன்னும் முடியாத நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் தாக்கத் தொடங்கி விட்டது. பிரிட்டனில் இதன் தொடக்கம் அமைந்தது. அந்த நாட்டில் அதிவேகமாக புதிய வகை கொரோனா பரவியது. அடுத்து அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்றவர்களுக்கு இந்த வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அதனால், ஆஸ்திரேலியா முன்னெச்சரிக்கை பணிகளில் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது.

புதிய வகை கொரோனா வைரஸ் – செளம்யா சாமிநாதனின் எச்சரிக்கை

இந்நிலையில் ஐநாவின் உலக சுகாதார மையத்தின் மூத்த விஞ்ஞானி செளம்யா சாமிநாதன் ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளார். “புதிய வகை கொரோனா வைரஸ் பல நாடுகளுக்குச் சென்றிருக்க வாய்ப்பு அதிகம். அதனால், அனைத்து நாடுகளின் அரசுகளும் தொடக்கத்திலேயே பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.