ஐஜி முருகன், எஸ்.பி ஜெயக்குமார் பெயர்களை டிக் அடித்த மூத்த அமைச்சர் – விஸ்வரூபமெடுக்கும் சாத்தான்குளம் விவகாரம்

சாத்தான்குளம் சம்பவம் எதிரொலியாக தூத்துக்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி அருண்பாலகோபாலன் இடமாற்றம் செய்யப்பட்டதோடு காத்திருப்பு பட்டியலிலும் வைக்கப்பட்டுள்ளார். புதிய எஸ்.பி-யாக விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றிய ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இடமாற்றம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றியவர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். புதிய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமைக் காவலர் மற்றும் காவலர் என 27 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே நாம் குறிப்பிட்டப்படி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அருண்பாலகோபாலன், அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு புதிய எஸ்.பி-யாக விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.பி-யாக பணியாற்றிய ஜெயக்குமார் பணியமர்த்தப்பட்டுள்ளார். அதே நேரத்தில் தென்மண்டல ஐஜியாக இருந்த சண்முகராஜேஸ்வரன், ஓய்வு பெறுவதையொட்டி மீண்டும் ஐஜியாக முருகன் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

ஐஜி முருகன்

மீண்டும் ஐஜி முருகன்

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், நெல்லை சரக டிஐஜியாகவும் தென்மண்டல ஐஜியாகவும் முருகன் பணியாற்றியுள்ளார். அதன்பிறகுதான் லஞ்ச ஒழிப்பு துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணியாற்றியபோதுதான் சர்ச்சையில் சிக்கி, சென்னையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவுக்கு ஐஜியாக இடமாறுதல் செய்யப்பட்டார். தற்போது மீண்டும் தென்மண்டல ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்மண்டலத்தில் ஐஜியாக பணியாற்றிய காலக்கட்டத்தில் முருகன் சிறப்பாக பணியாற்றியவர். தென்மண்டல அரசியல், காவல்துறையினரின் செயல்பாடுகள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை என அனைத்தும் முருகனுக்கு தெரியும். அதனால் தென்மண்டலத்தை காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் முருகன் வைத்துக்கொள்வார்.

எஸ்,ஜெயக்குமார்

தென்மண்டலத்தைப் பொறுத்தவரை சாதி ரீதியான மோதல்கள் அடிக்கடி நடைபெறும். அதை முன்கூட்டியே தெரிந்து பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் திறமை முருகனுக்கு உண்டு. தற்போது சாத்தான்குளம் சம்பவத்தின் பின்னணியில் உளவுத்துறையின் ரிப்போர்ட் மற்றும் அதிகாரிகளின் தவறான அணுகுமுறைதான் காரணம் என அரசுக்கு தகவல் வந்துள்ளது. அதனால்தான் முருகனை மீண்டும் தென்மண்டல ஐஜியாக நியமிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகியும் மூத்த அமைச்சர் ஒருவரும் சிபாரிசு செய்தார். தென்மண்டல ஐஜி பதவிக்கு போட்டிகள் இருந்தபோதிலும் முருகனின் பெயர் உடனடியாக டிக் அடிக்கப்பட்டது.

அமைச்சரின் ஆசி

முருகன், தென்மண்டலத்திலும் நெல்லை, தூத்துக்குடி குமரி ஆகிய மாவட்ட காவல் துறையில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால் எத்தகைய பிரச்னை என்றாலும் எளிதில் சமாளித்துவிடுவார். அதோடு ஆளுங்கட்சியினரோடு அனுசரித்து செல்வதோடு எதிர்கட்சியினரையும் அரவணைத்துச் சென்றுவிடுவார். அதன்மூலம் சாத்தான்குளம் சம்பவத்தில் காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கலுக்கும் விடை காண்பார் என்று நம்புகிறோம். சாத்தான்குளம் சம்பவம் நடப்பதற்கு முன், அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் குறித்து உளவுத்துறை எஸ்.பி அலுவலகத்துக்கு ரிப்போட் அனுப்பியுள்ளது.

SP Arun Balagopalan.

ஆனால் அந்த ரிப்போர்ட் அடிப்படையில் எஸ்.பி- அருண்பாலகோபாலன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாத்தான்குளம் சம்பவத்துக்குப்பிறகு அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி-யாக யாரை நியமிக்கலாம் என ஆலோசனை நடந்தபோது ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் விழுப்புரம் எஸ்.பி-ஜெயக்குமாரின் பெயரை சிபாரிசு செய்தார். அதனால்தான் தூத்துக்குடி எஸ்.பி-யாக ஜெயக்குமார் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்றனர்.

தூத்துக்குடி எஸ்.பி

ஜெயக்குமாரைப் பொறுத்தவரை எந்த பிரச்னை என்றாலும் சம்பவ இடத்துக்கு உடனே செல்லக்கூடியவர். மேலும் சென்னையிலேயே நீண்ட காலம் பணியாற்றியவர் என்பதால் சமயோகிதமாக நடந்துக் கொள்வார். ஐபிஎஸ் அதிகாரியை தூத்துக்குடி நியமித்தால் ஆளுங்கட்சியினரின் பேச்சை கேட்பார்களா என்ற கேள்வியை அ.தி.மு.கவினர் முன்வைத்தனர். அதனால்தான் ஐபிஎஸ் அதிகாரி இல்லாதவரும் திறம்பட செயல்படுவருமான ஜெயக்குமாரை தூத்துக்குடி எஸ்.பி-யாக பணியமர்த்தியுள்ளனர். தூத்துக்குடி எஸ்.பியாக உங்களை நியமித்திருக்கிறோம் என தகவல் ஜெயக்குமாருடன் கூறியபோது ஓகே என்று சொல்லிவிட்டு விழுப்புரத்திலிருந்து தூத்துக்குடிக்கு அவர் புறப்பட்டுவிட்டார். தூத்துக்குடியில் எஸ்.பி-யாக பணியாற்றிய அருண்பாலகோபாலன், ஐபிஎஸ் அதிகாரி என்பதாலும் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் ஆளுங்கட்சியினருக்கும் அவருக்கும் ஆரம்பத்திலேயே இருந்து ஒத்துப்போகவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Sathankulam station inspector Sridhar suspended over custodial ...
sathankulam inspector sridhar

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஸ்ரீதரையும் சர்ச்சையையும் பிரிக்க முடியாது என்கிறனர் போலீஸார். ஸ்ரீதரின் பேட்ஜ் அனைவரும் டிஎஸ்பியாகி விட்டனர். ஆனால் அதிரடிக்கும் சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கியதால் ஸ்ரீதருக்கு பதவி உயர்வு கிடைக்க காலதாமதமாகி வந்துள்ளது. இதையடுத்து வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் சர்ச்சையில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், பணியாற்றிய இடங்களில் எல்லாம் பரபரப்பை ஏற்படுத்தியவர். வள்ளியூர், நாசரேத் காவல் நிலையங்களில் அவர் பணியாற்றியபோது அவரின் பெயரைக் கேட்டாலே சிலர் தெறித்து ஓடுவார்களாம். நீண்ட நாளுக்குப் பிறகு அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது ஒரு தரப்பினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் ஐஜி முருகன், லஞ்ச ஒழிப்பு பிரிவில் பணியாற்றியபோது சர்ச்சையில் சிக்கியவர். அதனால்தான் அவரை பொருளாதார குற்றப்பிரிவுக்கு இடமாற்றினார்கள். அந்த விவகாரம் ஓயாத நிலையில் எப்படி தென்மண்டல ஐஜி பதவி வழங்கலாம் என்ற கேள்வியும் ஐ.பி.எஸ் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், சிபிசிஐடி விசாரணை ஆகியவற்றால் இந்த வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!

எஸ்.செல்வம்

Most Popular

வாழ்த்து சொல்வதற்காகவா டெல்லி சென்றார் கு.க.செல்வம்?

தலைமை மீதிருந்த அதிருப்தியினால் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் டெல்லி்யில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்ததாக தகவல் வெளியான நிலையில், தான் பாஜகவில் இணையவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் செல்வம். பின்னர் எதற்காக...

சென்னையில் ஒரு லட்சத்து 4,027 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர்...

30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை நெல் சாகுபடியில் சாதனை படைத்த தமிழக அரசு!

தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருப்பது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனையாக கருதப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த...

தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட 77.8% குணமடைந்துள்ளனர். உயிர்காக்கும் மருந்துகள் தமிழகத்தில்...