#IPL2021 பார்க்கப்போகும் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

 

#IPL2021 பார்க்கப்போகும் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

ஐபிஎல் போட்டியை மேலும் விறுவிறுப்பாக , ஐபிஎல் தொடரை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர உள்ளது.

கொரோனா பரவலால் கடந்த சீசனை போலவே இந்த சீசனிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் , ரசிகர்களின் ஏமாற்றத்தை குறைக்க சில தொழில்நுட்பங்களை கொண்டு வந்துள்ளதாக ஸ்டார் ஸ்போர்ட் நிறுவனத்தின் தலைவர் சஞ்ஜோக் குப்தா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய சஞ்ஜோக் குப்தா, “மைதானத்தில் உள்ள பீல்டர்கள் மற்றும் கீப்பர் ஆகியோர்களின் உரையாடல்களை தெளிவாக கேட்க ஸ்டம்பின் அருகே புதிய வகை ஸ்பீக்கர் பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் தோனி மற்றும் ரிஷப் பண்ட் போன்ற முன்னணி வீரர்கள் பேசும் போது அதை நேரலையில் ஒலிபரப்பு செய்து போட்டியை விறுவிறுப்பாக முயற்சி மேற்கொள்ளவுள்ளது.

#IPL2021 பார்க்கப்போகும் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

அடுத்ததாக பீல்டர்கள் ஓடும் வேகத்தையும், வீரர்கள் ரன் எடுக்க ஓடும் வேகத்தையும் துல்லியமாக ஸ்பீடோ மீட்டர் தொழில்நுட்பத்தின் மூலமாக கணக்கிடும் முறையை கொண்டு வரப்படவுள்ளது” என தெரிவித்தார். தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வேகமாக ஓடும் வீரர் தோனியா , கோலியா, டிவில்லியர்ஸா என விவாதங்கள் இருந்து வரும் நிலையில் இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் யார் வேகமாக ஓடுகிறார் என தெரிந்து கொள்ள முடியும் என ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.