கோவை மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் !

 

கோவை மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் !

தமிழக அரசால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் சேர்த்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளன பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, காந்திபுரம் 5,6,7 தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அத்தியாவசிய கடைகளன பால் , காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை.

கோவை மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் !

அனைத்து உணவகங்களிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அமர்ந்து 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி.

அனைத்து மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கும் மட்டும் அனுமதி; சில்லரை விற்பனைக்கு அனுமதி இல்லை.

50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதி.

கோவை மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் !

கேரளா தமிழ்நாடு மாநில எல்லைகள் அனைத்தும் சோதனை சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சோதனை சாவடி வழியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட கொரோனா இல்லை சான்று அல்லது தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்திக் கொண்ட சான்று உடன் வைத்திருக்க வேண்டும்.