அதிகரிக்கும் கொரோனா; மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கை!

 

அதிகரிக்கும் கொரோனா; மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கை!

திருப்பூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முதல்வர் மு.க ஸ்டாலின் அனுமதி வழங்கினார். அதன் படி சென்னை, கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்திலும் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் வினீத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதிகரிக்கும் கொரோனா; மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கை!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பால் மற்றும் மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே போல, டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும் அல்லது 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த கட்டுப்பாடுகள் திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.