திருப்பூர் மாவட்டத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்!

 

திருப்பூர் மாவட்டத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்!

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாளை முதல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் நாளைமுதல் பல்வேறு கட்டுபாடுகள் அமல்படுத்தப்படவுள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்!

கடந்த ஒருவாரமாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் அண்டை மாநிலமான கேரளாவில் நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டியது அவசியம் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் நாளை முதல் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் ,தவிர மற்ற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் அரசு மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கோவை மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.