கொரோனா பாதிப்பை சமாளிக்க புதிய நிவாரணத் திட்டம்… பிரதமர் மோடி யோசனை!

கொரோனா பாதிப்பை சமாளிக்க புதிய நிவாரணத் திட்டம்… பிரதமர் மோடி யோசனை!

கொரோனா பாதிப்பு காரணமாக சிதைந்து போய் உள்ள இந்தியப் பொருளாதாரத்தை மீட்க புதிய திட்டங்களை அறிவிக்க பிரதமர் மோடி திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கொரோனா பாதிப்பை சமாளிக்க புதிய நிவாரணத் திட்டம்… பிரதமர் மோடி யோசனை!
கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது மக்களுக்கு மூக்கடலை வழங்குவது உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசு நிறுவனங்கள் எல்லாம் தனியாருக்கு திறந்துவிடப்பட்டன. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் கொடுக்க வங்கிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இஎம்ஐ கட்ட அவகாசம் என்ற பெயரில் கூடுதல் வட்டி என்று பல்வேறு திட்டங்கள்

கொரோனா பாதிப்பை சமாளிக்க புதிய நிவாரணத் திட்டம்… பிரதமர் மோடி யோசனை!

அறிவிக்கப்பட்டன. இதனால் பொது மக்கள், நிறுவனங்கள் ஏமாற்றம் அடைந்தன.
அரசின் அறிவிப்புகள் பொருளாதாரத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதே நேரத்தில் கொரோனா பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதை எதிர்கொள்ள முடியாமல் நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தள்ளாடி வருகின்றன.

கொரோனா பாதிப்பை சமாளிக்க புதிய நிவாரணத் திட்டம்… பிரதமர் மோடி யோசனை!
இதைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்க பிரதமர் மோடியே முன்வந்து சில திட்டங்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. வரி விதிப்பைக் குறைப்பது உள்ளிட்ட புதி திட்டங்களை பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், இந்தியா சுயச்சார்புடன் இருக்கும் வகையில் அந்த அறிவிப்புகள் இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.