தமிழகத்தில் நாளை முதல் புதிய தளர்வுகள் அமல் : இயல்பு நிலைக்கு திரும்பும் மக்கள்!

தமிழகத்தில் நாளை முதல் புதிய தளர்வுகள் அமல் : இயல்பு நிலைக்கு திரும்பும் மக்கள்!

தமிழகம் முழுவதும் ஊரடங்கு நாளை காலை 6 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில் நாளை முதல் புதிய தளர்வுகள் அமலாகின்றன.

தமிழகத்தில் நாளை முதல் புதிய தளர்வுகள் அமல் : இயல்பு நிலைக்கு திரும்பும் மக்கள்!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருவதால் அனைத்து மாவட்டத்திற்கும் ஒன்றாக சேர்த்து புதிய தளர்வுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மாவட்டங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கொரோனா குறைந்து வருவதால் ஒரே மாதிரியான தளர்வுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அரசு மற்றும் தனியார் தொழில் சார் பொருள்காட்சி நிகழ்வுகளுக்கு வழிகாட்டுதல் அனுமதி ,தங்கும் விடுதிகள் விருந்தினர்களுக்கு 50% வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம். தேநீர் கடைகளில் வாடிக்கையாளர்கள் 50 சதவீத பேருடன் செயல்படலாம். துணிக்கடைகள் ,நகைக்கடைகள், அரசு பயிற்சி நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் , அனைத்தும் வழிகாட்டுதல் முறையை பின்பற்றி செயல்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் புதிய தளர்வுகள் அமல் : இயல்பு நிலைக்கு திரும்பும் மக்கள்!

அதே சமயம் திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு கலாச்சார நிகழ்வுகள், பள்ளி மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள், மாநிலங்களுக்கிடையேயான அரசு மற்றும் பொது போக்குவரத்து உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது