கேரளாவில் புதிய தளர்வுகள் இன்று முதல் அமல்!

 

கேரளாவில் புதிய தளர்வுகள் இன்று முதல் அமல்!

கடந்த ஒருவாரமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் 3 நாட்களாக தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 27,254 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் 219 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலமாக இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,42,874 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் புதிய தளர்வுகள் இன்று முதல் அமல்!

இந்த சூழலில் கேரளாவில் கடந்த 8ஆம் தேதி முதல் தினசரி குறைந்தது 30 ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது. கடந்த 5 நாட்களாக கொரோனா தொடர் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. கேரளாவில் கொரோனா குறைந்து வருவது மாநில மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அத்துடன் விதிமுறைகளை தவறாது கடைபிடித்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அம்மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.

கேரளாவில் புதிய தளர்வுகள் இன்று முதல் அமல்!

இந்நிலையில் கேரளாவில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் பூங்காக்கள் திறக்கப்படுவதுடன், பொதுமக்கள் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடவும் இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பத்மநாபபுரம் அரண்மனையும் இன்று பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது.