பிரேசிலில் சுமார் 700 கி.மீ தூரத்திற்கு மெகா நீளமான மின்னல் – 16.73 நொடிகள் நீடித்த மற்றொரு மின்னல்

 

பிரேசிலில் சுமார் 700 கி.மீ தூரத்திற்கு மெகா நீளமான மின்னல் – 16.73 நொடிகள் நீடித்த மற்றொரு மின்னல்

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் கடந்தாண்டு 700 கி.மீ தூரத்திற்கு மெகா நீளமான மின்னல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி பிரேசில் நாட்டில் 700 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள ஒரு மின்னல் வெட்டியது. இதன் நீளம் ஒப்பீட்டளவில் பாஸ்டனுக்கும் வாஷிங்டன் டி.சி.க்கும் இடையிலான தூரத்திற்கு சமமானதாகும். தற்போதைக்கு இதுதான் வரலாற்றிலேயே மிகவும் நீளமான மின்னல் என்று உலக சாதனை உருவாக்கியுள்ளதாக ஐ.நாவின் வானிலை நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேபோல கடந்தாண்டு மார்ச் 4-ஆம் தேதி தெற்கு அர்ஜென்டினாவில் ஏற்பட்ட மின்னல் 16.73 நொடிகளுக்கு நீடித்தது. இதன் மூலம் வரலாற்றில் அதிக நேரம் நீடித்த மின்னல் என்ற உலக சாதனை நிகழ்ந்துள்ளது.

முன்னதாக ஜூன் 2007-இல் அமெரிக்க மாநிலமான ஓக்லஹோமாவில் 321 கிமீ (199.5 மைல்) நீளத்திற்கு ஏற்பட்ட மின்னலே சாதனையாக பார்க்கப்பட்டது. அதேபோல பிரான்ஸ் நாட்டில் ஆகஸ்ட், 2012-ஆம் ஆண்டு 7.74 நொடிகள் நீடித்த மின்னலே அதிக நேரம் நீடித்த மின்னல் என்ற சாதனையாக இருந்தது.