கமலா ஹாரீஸ் போட்டியிட புது சிக்கல்! – பிரச்னையை பெரிதாக்கும் ட்ரம்ப்

 

கமலா ஹாரீஸ் போட்டியிட புது சிக்கல்! – பிரச்னையை பெரிதாக்கும் ட்ரம்ப்

நவம்பரில் அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான ஆயத்த வேலைகளை அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.  ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன்.

கமலா ஹாரீஸ் போட்டியிட புது சிக்கல்! – பிரச்னையை பெரிதாக்கும் ட்ரம்ப்

இந்நிலையில் ஜோ பிடன், துணை அதிபராகப் போட்டியிட  இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார். இந்தச் செய்தி உலகம் முழுவதும் திரும்பி பார்க்க வைத்து.

இந்நிலையில் கமலா ஹாரீஸ் துணை அதிபராவதில் சட்டச் சிக்கல் இருப்பதாக அந்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் கிளப்பியுள்ளார். இதுதான் தற்போது அமெரிக்காவில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

அமெரிக்காவில் பிறந்த குடிமகனைத் தவிர வேறு எவரும் அதிபர் பதிவி வகிக்க தகுதி பெற மாட்டார்கள் என்பதுதான் அதில் உள்ள சட்டச் சிக்கல். ஆனால், அதிகார எல்லைக்கு உட்பட்டு அமெரிக்காவில் பிறப்பவர்கள் எல்லோருமே குடிமக்கள்தான் என்றொரு அம்சம் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கமலா ஹாரீஸ் போட்டியிட புது சிக்கல்! – பிரச்னையை பெரிதாக்கும் ட்ரம்ப்

அதாவது கமலாவின் தாய் இந்தியா வம்சாவளியினர். அப்பா ஜமைக்காவைச் சேர்ந்தவர். அதனால், கமலாவின் குடியுரிமையைப் பற்றிய கேள்வியை எழுப்புகின்றனர்.

கமலா ஹாரீஸ் பிறக்கும்போது அவரின் பெற்றோர் மாணவர் விசாவில் அமெரிக்காவில் வசித்திருந்தால், குடியுரிமை பற்றிய விசாரணை அடுத்தக் கட்டத்திற்குச் செல்லும் எனக் கூறப்படுகிறது.

உலகம் முழுக்க கமலா ஹாரீஸ்க்கு கிடைத்துவரும் ஆதரவினைப் பார்த்து கடுப்பாக இருந்த ட்ரம்ப் கட்சியினருக்கு இது லட்டு கிடைத்ததுபோலாகி விட்டது. அதனால் இந்தப் பிரச்னையை தூபம் போட்டு வளர்கிறார்கள்.

கமலா ஹாரீஸ் போட்டியிட புது சிக்கல்! – பிரச்னையை பெரிதாக்கும் ட்ரம்ப்

இப்பிரச்னை குறித்து பேசிய அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ‘கமலா ஹாரீஸ் குடியுரிமை குறித்து கூறப்படும் கருத்து சரியா… தவறா என்று தெரியாது. கமலாவை வேட்பாளராக அறிவிக்கும் முன் அக்கட்சியினர் செக் பண்ணியிருப்பார்கள் என நினைக்கிறேன். ஆயினுன் இது சீரியஸான பிரச்னைதான்’ என்கிறார்.