புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டுகிறது ‘டாடா’ நிறுவனம்!

 

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டுகிறது ‘டாடா’ நிறுவனம்!

நாடே கொரொனா பீதியில் உள்ள நேரத்தில், புதிய நாடாளுமன்ற வளாகம் கட்ட ரூ.25 ஆயிரம் கோடியை ஒதுக்கியது மத்திய அரசு. கொரோனா தீவிரம், ஊரடங்கு என்று மக்கள் அச்சத்திலிருந்ததால் ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கியது பற்றிய செய்தி பெரிய அளவில் மக்கள் மத்தியில் சென்றடையவில்லை. நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் நமக்கு உலகின் மிகவும் மாடர்ன் மற்றும் ஹெடெக் நாடாளுமன்றம் வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அதனை ஏற்றுக்கொண்டே பிரதமர் நாடாளுமன்றத்தை கட்டுவதாகவும் தகவல்கள் கசிந்தன. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் புதிய நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022ம் ஆண்டில் நாம் 75வது சுதந்திர தினம் நிறைவு செய்யும் தருவாயில் புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டுகிறது ‘டாடா’ நிறுவனம்!

இந்நிலையில் இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ளது. ஏலத்தில் பல நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில் ரூ. 861.90 கோடிக்கு ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் கைப்பற்றியது.

தற்போது உள்ள நாடாளுமன்ற வளாக கட்டிடம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ரூ.83 லட்சம் செலவில் கட்டப்பட்டதாகும். இதனை 1927 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய ஆளுநர் லார்டு இர்வின் ஜனவரி 18ம் தேதி திறந்துவைத்தார். இந்த கட்டிடத்தை வடிவமைத்தவர் எட்வின் லுடியென் ஆவார்.