புதிய நோட் 7 போன் – இன்ஃபினிக்ஸ் அறிமுகம் !பக்கவாட்டில் விரல் ரேகை சென்சார் – 5000 எம்ஏஎச் பேட்டரி

 

புதிய நோட் 7 போன் – இன்ஃபினிக்ஸ் அறிமுகம் !பக்கவாட்டில் விரல் ரேகை சென்சார் – 5000 எம்ஏஎச் பேட்டரி

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் நோட் 7 என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.

புதிய நோட் 7 போன் – இன்ஃபினிக்ஸ் அறிமுகம் !பக்கவாட்டில் விரல் ரேகை சென்சார் – 5000 எம்ஏஎச் பேட்டரி

6.59 இன்ச் எச்டி பிளஸ் திரை கொண்ட இந்த ஸ்மார்ட் போன், ஆண்டிராய்ட் 10 இயங்குதளத்தில் இயங்குகிறது. மேலும் 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரியுடன் அறிமுகமாகி உள்ள இந்த போனில் 5000 எம்ஏ எச் பேட்டரி உள்ளது. இத்துடன், 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜரும் கிடைக்கிறது. இதன் மூலம் 2 மணிநேரத்தில் இந்த போனை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய நோட் 7 போன் – இன்ஃபினிக்ஸ் அறிமுகம் !பக்கவாட்டில் விரல் ரேகை சென்சார் – 5000 எம்ஏஎச் பேட்டரி

கேமராவை பொறுத்தவரை பின்புறத்தில் 48 எம்பி, மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் ஆகிய கேமரா செட்அப்பும், முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமராவும் உள்ளது.

இதில் முக்கிய சிறப்பம்சமாக பக்கவாட்டில் விரல் ரேகை சென்சார் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மிக எளிமையாக போனை அன்லாக் செய்ய முடியும் என்பது இதன் சிறப்பு. மேலும் டிடிஎஸ் ஒலி வசதியும் இதில் உள்ளதாக இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய நோட் 7 போன் – இன்ஃபினிக்ஸ் அறிமுகம் !பக்கவாட்டில் விரல் ரேகை சென்சார் – 5000 எம்ஏஎச் பேட்டரி

பாரஸ்ட் கீரின் உள்ளிட்ட 3 வகையான வண்ணங்களில் அறிமுகமாகி உள்ள இந்த ஸ்மார்ட்போன் 11 ஆயிரத்து 499 என்ற விலைக்கு பிளிப்கார்ட் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு கிடைக்கிறது.

-எஸ். முத்துக்குமார்