மு.க. ஸ்டாலின் அரசின் புதிய அமைச்சர்கள்? தலைமைச் செயலாளர் யார்?

 

மு.க. ஸ்டாலின் அரசின் புதிய அமைச்சர்கள்? தலைமைச் செயலாளர் யார்?

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையோடு வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவி ஏற்க உள்ளார். நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக சட்டமன்ற தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இன்று காலை ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர் திமுக ஆட்சி அமைக்க உரிமை கோரினார் .எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் உள்ளிட்டவற்றை ஆளுநரிடம் கொடுத்து உரிமை கோரிய ஸ்டாலின் நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்கிறார் . கொரோனா காரணமாக ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கும் விழா ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சி தலைவர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ள நிலையில் நாளை மறுநாள் காலை 9 மணிக்கு அவர் தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

மு.க. ஸ்டாலின் அரசின் புதிய அமைச்சர்கள்? தலைமைச் செயலாளர் யார்?

இந்நிலையில் திமுகவில் யார் யாருக்கு அமைச்சர் பதவி என்ற மாபெரும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சராக துரைமுருகன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.என்.நேருவுக்கு உள்ளாட்சித் துறையும், எ.வ. வேலுவுக்கு நெடுஞ்சாலைத் துறையின் ஒதுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக மா. சுப்ரமணியம் நியமிக்கப்பட உள்ளாராம். இதனால் அவர் கொரோனா சிகிச்சை பெறும் மையங்களுக்கு சென்று பார்வையிடும் பணியை முன்கூட்டியே தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

மு.க. ஸ்டாலின் அரசின் புதிய அமைச்சர்கள்? தலைமைச் செயலாளர் யார்?

அதேபோல் தமிழக தலைமைச் செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் முதல்வரின் தனி செயலாளர்களாக ஐஏஎஸ் உதயச்சந்திரன், உமாநாத், எம்எஸ் சண்முகம் ஆகியோர் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. அதே சமயம் சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தொடருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.