திருமணமான 40 நாட்களில் புதுமணப்பெண் கொலை-குற்றவாளிகளை தேடும் போலீஸ்

 

திருமணமான 40 நாட்களில் புதுமணப்பெண் கொலை-குற்றவாளிகளை தேடும் போலீஸ்

திருமணமான 40 நாட்களில் புதுமணப்பெண் கொலை – மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மோப்ப நாய் உதவியுடன் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளி தேடி வருகின்றனர்*

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அடுத்து வாழவந்தான்புரம் பகுதியில் வசிப்பவர் ஜான்ரவி இவரது மகன் அருள்ராஜ் வயது 28 என்பவருக்கும், லால்குடி அடுத்து மணக்கால் பகுதியில் வசிக்கும் திரவியநாதன் மகள் கிறிஸ்டின் ஹெலன்ராணி வயது 26 எம்.காம் படித்துள்ளார் இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த 10.7.2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் வாழவந்தான்புரம் பகுதியில் வசித்து வருகின்றனர். மேலும் இவர்கள் வசிக்கும் வாழவந்தான்புரம் பகுதியில் கொள்ளிடம் கரையோர பகுதியில் தான் வசித்து வருகின்றனர்.

திருமணமான 40 நாட்களில் புதுமணப்பெண் கொலை-குற்றவாளிகளை தேடும் போலீஸ்

இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற கிரிஷ்டின் ஹெலான்ராணி மீண்டும் வீடு திரும்பவில்லை இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் 5.30 மணி அளவில் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் தேடி வந்துள்ளனர். அப்போது கிரிஷ்டின் ஹெலன்ராணி அணிந்து இருந்த செருப்பும், அவரது ஆடைகள் களையப்பட்டு கொள்ளிடம் ஆற்றின் மணல் வெளிப்பகுதியில் கிடந்துள்ளது. மீண்டும் அவரது உறவினர்கள் தேடியபோது அந்தப்பகுதி தண்ணீரில் நிர்வாணமாக இறந்து மிதந்து கிடந்துள்ளார். உடனே அவர்கள் கூச்சலிட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஓடி வந்து அவரது உடலை மீட்டு மணல் பகுதியில் வைத்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த நம்பர் 1 டோல்கேட் காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை உடனே பிடிப்பதாக இறந்த பெற்றோர்களின் தெரிவித்து விட்டு சென்றார். மேலும் மோப்ப நாய், கைரேகை நிபுணர்களும் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து பெண்ணின் தாய் பிரகாசி கூறும்போது….

திருமணமாகி அடுத்த நாளில் இருந்தே இருவருக்கும் அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளது, இதை எனது மகளிடம் கேட்டதற்கு மறுத்துவிட்டாள் அதுமட்டுமில்லாமல் அருள்ராஜ் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்றுள்ளார் இதனால் எனது மகளின் கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

திருமணமான 40 நாட்களில் புதுமணப்பெண் கொலை-குற்றவாளிகளை தேடும் போலீஸ்

மேலும் போலீசார் விசாரணையில் அந்தப் பெண் அணிந்திருந்த 5 பவுன் நகை திருடப்பட்டுள்ளது மேலும் பெண்ணின் உறுப்புகளில் காயம் இருப்பதாக தெரியவில்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர் மேலும் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் கூடாரமாக இருந்து வந்துள்ளது இதனால் யாரேனும் அங்கு வந்த பெண்ணை மானபங்கப்படுத்தி கொலை செய்துள்ளார்களா அல்லது அந்தப் பெண் தவறி நீரில் விழுந்து இறந்தாரா அல்லது அவரது கணவர் கொலை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சந்தேகத்தின்பேரில் இறந்த கணவர் அருள்ராஜ் விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

திருமணமாகி 40 நாட்களில் புதுமணப்பெண் நிறுவானத்துடன் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.