”ஜிமெயில், கூகுள் டிரைவ்-க்கு புதிய லோகோ” – கூகுள் அறிமுகம்

 

”ஜிமெயில், கூகுள் டிரைவ்-க்கு புதிய லோகோ” – கூகுள் அறிமுகம்

ஜிமெயில், கூகுள் டிரைவ் உள்ளிட்டவற்றிற்கு புதிய லோகோவை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

”ஜிமெயில், கூகுள் டிரைவ்-க்கு புதிய லோகோ” – கூகுள் அறிமுகம்

இதன் மூலம், ஒரு புதிய தோற்றத்தை ஏற்படுத்தி, பொருட்களுக்கு புத்துயிர் ஊட்டவும் கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. லோகோவில் ஏற்பட்டுள்ள இந்த புதிய மாற்றங்கள் பார்ப்பதற்கு ஸ்டைலாக, கண்ணை கவரும் வண்ணங்களுடன் உள்ளது. இதனிடையே ஜிமெயிலை பொறுத்தவரை, லேட்டஸ்ட் அப்டேட்டில் இந்த புதிய லோகோ கிடைக்கும் என்றும், எனினும் இந்த புதிய லோகோ, ஸ்மார்ட்போனின் ஹோம் திரையில் மட்டுமே பிரதிபலிக்கும் என்றும் குறிப்பிட்ட செயலியில் பிரதிபலிக்காது என்றும் தெரிகிறது.

”ஜிமெயில், கூகுள் டிரைவ்-க்கு புதிய லோகோ” – கூகுள் அறிமுகம்

குறிப்பாக தபால் கவர் போல காட்சி யளித்த ஜிமெயிலின் லோகோ மாற்றப்பட்டு சிகப்பு, நீலம், மஞ்சள் மற்றும் பச்சை கலந்த தோற்றத்தில் ஆங்கில எழுத்தான M மட்டும் தனியாக தெரியும் வகையில் புதிய மாற்றம் பெற்றுள்ளது.

  • எஸ். முத்துக்குமார்