கல்வி தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் நாளை முதல் தொடக்கம்!

 

கல்வி தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் நாளை முதல் தொடக்கம்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பாடநூல்கள் வழங்கும் திட்டத்தை நாளை துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி தொடர்ந்து ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது . அந்த வகையில் சென்ற ஆண்டில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமல் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. குறிப்பாக 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது .இதையடுத்து மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதால் புதிய பாடங்கள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கல்வி தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் நாளை முதல் தொடக்கம்!

இந்நிலையில் தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சியில் நாளை முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குகிறது . தமிழக அரசின் கல்வி டிவியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார். புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்களை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்குவதையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

கல்வி தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் நாளை முதல் தொடக்கம்!

முன்னதாக கொரோனாதொற்று காரணமாக தற்போது பள்ளி திறக்கும் எண்ணம் இல்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பி ல் மகேஷ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது