‘காதல் மன்னன் காசி வழக்கில் திடீர் திருப்பம்’- ஆதாரங்களை அழித்து சிபிசிஐடி வசம் சிக்கிய தந்தை!

‘காதல் மன்னன் காசி வழக்கில் திடீர் திருப்பம்’- ஆதாரங்களை அழித்து சிபிசிஐடி வசம் சிக்கிய தந்தை!

மாணவிகள் முதல் விஐபிக்களின் மனைவிகள் வரை கட்டுமஸ்தான உடலைக் காட்டி அடி பணிய வைத்தவர் நாகர்கோவிலை சேர்ந்த காசி. பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து, ஆபாசப் புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொண்டு அவர்களிடம் பணம் பறிப்பதையே வேலையாக கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய காசியை எதிர்த்து சென்னையை சேர்ந்த பெண் புகார் அளித்ததன் பேரில், கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.

‘காதல் மன்னன் காசி வழக்கில் திடீர் திருப்பம்’- ஆதாரங்களை அழித்து சிபிசிஐடி வசம் சிக்கிய தந்தை!

பெண்களை ஏமாற்றி பணம் பறித்து கார், பங்களா என ராஜ வாழ்க்கை வாழ்ந்த காசி மீது பாலியல் குற்றம், கந்துவட்டி என அடுத்தடுத்து புகார்கள் குவிந்தன. அதனால் காசி மீது 7 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தை போலவே அரங்கேறிய இந்த குற்றங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதால் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணையில் காசியின் ஒரு லேப்டாப்பில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஒரு கோழிப்பண்ணையில் மீட்கப்பட்ட அந்த லேப்டாப்பில் இருந்த ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கபபட்டிருந்துள்ளது.

‘காதல் மன்னன் காசி வழக்கில் திடீர் திருப்பம்’- ஆதாரங்களை அழித்து சிபிசிஐடி வசம் சிக்கிய தந்தை!

இந்த குற்றத்தை காசியின் தந்தை தான் செய்ததாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அவரும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், காசிக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அந்த லேப்டாப்பில் இருந்த ஆதாரங்களை மீட்ட போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.