தமிழகத்தில் புதிய பாதிப்பு 5871 : இன்று 119 பேர் உயிரிழப்பு!

 

தமிழகத்தில் புதிய பாதிப்பு 5871  : இன்று 119 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் புதிதாக 5871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 993 பேருக்கு இன்றைக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 3, 14,520 என்ற கணக்கில் உள்ளது.

நேற்று 5,834 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிப்பின் எண்ணிகை மொத்தம் 3,08,649 என்ற கணக்கில் இருந்தது. இன்றைக்கு புதிதாக பேருக்கு
தொற்று உறுதி செய்யப்பட்டதில் மொத்த பாதிப்பின் எண்ணைக்கை 3,14,520 என்று உள்ளது.

கொரோனா சிகிச்சைக்காக சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 118பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று 119 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். சென்னையில்
மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,278 ஆக உள்ளது.

5,633 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றைய கணக்கின்படி மொத்தம் 2,50,680 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருந்தனர். இன்றைய நிலவரப்படி 2,56,313 பேர் குணமடைந்துள்ளனர்.

நாளுக்கு நாள் கொரோனா தாக்குதல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குணமடைந்து பலரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தாலும் புதிதாக கொரோனா தொற்று
உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருப்பதுதான் கவலை அளிக்கிறது.கொரோனாவினால் மற்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும், சிகிச்சை பெறுவதிலும் பல சிக்கல்களும் இருக்கின்றன. இதனால் பலரும் தங்களது வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை கூட செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள்.

இந்நிலையில், கொரோனா நோய்ப் பரவல் கட்டுக்குள் வரும்வரை வழக்கமாகச் செய்துகொள்ளும் பல் பரிசோதனைகளைத் தள்ளிவைக்கும்படி உலக சுகாதார
நிறுவனம் அறிவுறுத்தி இருக்கிறது. பல் பரிசோதனைகள், பற்களைச் சுத்தம் செய்தல், பராமரிப்பு ஆகியவற்றை ஒத்திவைக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளது.
பல் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளும்போது கொரோனா கிருமி பரவுவதற்கான சாத்தியம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும், சிறிய நுண்ணுயிர்களை சுவாசிப்பதன் மூலம் தொற்று ஏற்படுமா என்பதை இன்னும் ஆழமாக ஆராய, உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்திருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.44 லட்சத்தை தாண்டி இருக்கிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 7,44,367 பேர் கொரோனா
தொற்றினால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 20,500,383 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 13,422,612 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்றைய கணக்கின்படி உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் 7,37,863 என்று இருந்தது. உலகம் முழுவதும் கொரோனாவால் 20,236,931 பேர்
பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 13,092,792 பேர் குணமடைந்திருந்தனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 22,68,675-ல்
இருந்து 23,29,638 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை இந்தியாவில் 2,60,15,297 கோடி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஒரே நாளில் 7,33,449 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.