தமிழக உளவுத் துறைக்கு புதிய ஐ.ஜி! – தமிழக அரசு உத்தரவு

 

தமிழக உளவுத் துறைக்கு புதிய ஐ.ஜி! – தமிழக அரசு உத்தரவு

சென்னை மாநகர போலீசில் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் இயக்குநர்/ ஐ.ஜி-யாக பணியாற்றி வந்த ஈஸ்வர மூர்த்தியை தமிழ்நாடு உளவுத் துறை ஐ.ஜி-யாக நியமித்து தமிழக உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில், “தமிழக போலீஸ் ஐ.ஜி-யாக பணியாற்றி வந்த கே.என்.சத்தியமூர்த்தி பணியில் இருந்து ஓய்வு பெறுவதால், அவர் வகித்து வந்த உளவுத் துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் பதவிக்கு நியமிக்கப்படுவதாக உள்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈஸ்வர மூர்த்தி அடுத்த உத்தரவு வரும் வரையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக தொடர்வார் என்று கூறப்பட்டுள்ளது.
போலீசைப் பொருத்தவரை உளவுத் துறை ஐ.ஜி என்பது மிக முக்கியமான பதவியாகும். டிஜிபி-க்கு அடுத்தபடியாக முதல்வரிடம் நேரடி தொடர்பில் இருக்கும் பதவி உளவுத்துறை ஐ.ஜி பதவியாகும். இந்த பொறுப்புக்கு ஈஸ்வர மூர்த்தி நியமிக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக அரசுப் பணிகள் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று போலீஸ் ஆனவர் ஈஸ்வர மூர்த்தி, 2000ம் ஆண்டில் ஐ.பி.எஸ் அதிகாரியாக தகுதி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.