சென்னையில் இனிமேல் இப்படித்தான் அபராதம் வசூலிக்கப்படும்; புதிய நடைமுறை அமல்!

 

சென்னையில் இனிமேல் இப்படித்தான் அபராதம் வசூலிக்கப்படும்; புதிய நடைமுறை அமல்!

சென்னையில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதும், அதற்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிப்பதும் வழக்கமான ஒன்று தான். ஆனால் அபராதம் விதிக்கும் போலீசார், லஞ்சம் வசூலிப்பதாக வாகன ஓட்டிகளுக்கும் போலீசாருக்கும் இடையே பல பிரச்னைகள் தொடர்ந்து எழுந்து வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சென்னை கமிஷ்னராக இருந்த ஏ.கே விஸ்வநாதன், டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்தும் நடைமுறையை அமல்படுத்தினார். அதிலும் கூட பல முறைகேடுகள் நடப்பதாக வாகன ஓட்டிகள் விமர்சித்து வந்தனர்.

சென்னையில் இனிமேல் இப்படித்தான் அபராதம் வசூலிக்கப்படும்; புதிய நடைமுறை அமல்!

இந்த நிலையில், வாகன ஓட்டிகளுக்கும் போலீசாருக்கும் ஏற்படும் பிரச்னையை தடுக்க சென்னை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஒரு புதிய நடைமுறையை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘சில வாகன ஓட்டிகள் செல்வாக்கை பயன்படுத்தி போலீசாரை மிரட்டுவதாகவும் இதனை தடுக்கும் விதமாக சென்னையில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து, அதற்கான ரசீதை வாகனத்தின் மீது போலீசார் ஓட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், இவ்வாறு செய்வதன் மூலமாக வாகன ஓட்டிகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடக்கும் பிரச்னை தவிர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.