வரும் கல்வி ஆண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கல்வி கட்டணம்.. முழு விவரம் உள்ளே!

வரும் கல்வி ஆண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கல்வி கட்டணம்.. முழு விவரம் உள்ளே!

தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான மாணவர்கள் சேர்ந்து வரும் நிலையில், கலந்தாய்வு மூலம் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு அரசு கட்டண நிர்ணயம் செய்து வருகிறது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீதான புகார்களை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் தலைமையிலான கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது.

வரும் கல்வி ஆண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கல்வி கட்டணம்.. முழு விவரம் உள்ளே!

வழக்கமாக இந்த நேரத்தில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியிருக்கும். ஆனால் தற்போது கொரோனா பிரச்சனையால் மாணவர்கள் சேர்க்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் புதிய கட்டணத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கட்டண நிர்ணய குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன் படி அடுத்த 3 ஆண்டிற்கான, அதாவது 2020- 21 முதல் 2022- 23 வரை புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.

வரும் கல்வி ஆண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கல்வி கட்டணம்.. முழு விவரம் உள்ளே!

இதற்காக கல்லூரி நிர்வாகங்கள் தாங்கள் எதிர்பார்க்கும் கல்வி கட்டண உயர்வு உள்ளிட்ட மொத்த விவரங்களையும் வரும் 15 ஆம் தேதிக்குள் கட்டண நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பின்னர், அந்த மனுக்களை ஆய்வு செய்து புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.