திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய தொழிற்சாலை கொண்டுவரப்படும்! – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

 

திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய தொழிற்சாலை கொண்டுவரப்படும்! – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி


திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத்தைத் தவிர வேறு எந்த தொழிலும் இல்லை என்று மக்கள் வேதனைப்படும் நிலையில், விளைபொருட்களை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சாலை கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய தொழிற்சாலை கொண்டுவரப்படும்! – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி


திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசினார். அப்போது, “2016-17ம் ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 1,33,316 விவசாயிகளுக்கு ரூபாய் 161.21 கோடி நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் திருவாரூர் மாவட்டத்தில் பதிவு செய்திருந்த 5,65,392 விவசாயிகளில், இதுவரை, 3,64,523 விவசாயிகளுக்கு சுமார் 64 சதவிகித இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 1,100 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் உணவுப் பூங்கா ஒன்று தோற்றுவிக்கப்படும். மேலும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல், கிராமங்களில் வாழ்கின்ற ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி கற்க ஏதுவாக குடவாசல் மற்றும் நன்னிலத்தில் இரண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், வலங்கைமானில் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றும், கோட்டூரில் ஐடிஐ ஒன்றும் அரசால் உருவாக்கித் தரப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இதுபோன்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய தொழிற்சாலை கொண்டுவரப்படும்! – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி


இந்தப் பகுதியில் புதிய தொழில் தொடங்க வேண்டுமென்று அமைச்சர் தெரிவித்தார்கள். கொரோனா காலத்திலும், தமிழகத்தில் மட்டும் சுமார் ரூபாய் 31,000 கோடி தொழில் முதலீட்டை இந்த 5 மாதங்களில் நாம் ஈர்த்திருக்கின்றோம். இந்தியாவிலேயே, கொரோனா காலத்தில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடுதான். திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் தொழில்தான் பிரதான தொழிலாக இருக்கிறது. வேறு எந்தத் தொழிலும் பிரதானமாக இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார். அவரது கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளைபொருட்களைக் கொண்டு ஒரு புதிய தொழில் இந்த மாவட்டத்தில் தொடங்குவதற்கு அரசு முயலும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா வகையிலும் இந்த அரசு மக்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறது.

திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய தொழிற்சாலை கொண்டுவரப்படும்! – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி


டெல்டா பகுதியான இந்தப் பகுதியில், கடைமடை பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு எவ்விதத் தடையும் இல்லாமல் நீர் கிடைப்பதற்காக கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு இருக்கின்றன. பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் தேக்கி வைத்து கோடை காலத்தில் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக, திருவாரூர் மாவட்டத்தில் ஏரிகள், குளங்கள், ஊரணிகள், குட்டைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு இருக்கின்றன. தமிழக அரசு நீர் மேலாண்மைத் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அரசு பல்வேறு வகையில் திருவாரூர் மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.