75 மணி நேரத்தில் புதிய கல்விக்கொள்கை தமிழில்… அசத்திய டீம் வொர்க்

 

75 மணி நேரத்தில் புதிய கல்விக்கொள்கை தமிழில்… அசத்திய டீம் வொர்க்

புதிய கல்விக்கொள்கையைப் படிக்காமலே கருத்து சொறாங்க’ இக்கொள்கையை அதரிப்பவர்கள் சொல்வது இதுதான். ஆனால், அது இன்னும் மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட வில்லை என்பது வருத்தமான ஒன்று.

புதிய கல்விக் கொள்கை’ இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு 2017 ஆண்டிலிருந்து உருவாக்கியது. இதனை கடந்த ஆண்டு (2019) மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலிடம் கொடுத்தது. அதன்மீது நாட்டு மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. சில நாள்களுக்கு முன் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறது.

75 மணி நேரத்தில் புதிய கல்விக்கொள்கை தமிழில்… அசத்திய டீம் வொர்க்

இப்போதைய தமிழகத்தின் டாபிக்கல் செய்தியே புதிய கல்விக்கொள்கைதான். ஆனால், அதை தமிழக மக்கள் அனைவரும் படிக்க முடியாத நிலையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் அந்தக் கொள்கை வடிவம் இருக்கிறது. அதனால், அதை தமிழில் மொழியாக்கம் செய்ய நினைத்தார் எழுத்தாளர் விழியன். இவர் ஏற்கெனவே புதிய கல்விக் கொள்கை வரைவை (400 பக்கங்களுக்கும் அதிகம் உள்ளது) ஒரு குழுவை ஒருங்கிணைத்து வெற்றிக்கரமாக செய்து முடித்தார். அதேபோல இப்போதும் ஒரு குழுவை ஒருங்கிணைத்து 75 மணி நேரத்தில் புதிய கல்விக் கொள்கையினை தமிழில் மொழிபெயர்க்க வைத்துள்ளார்.

இது பற்றி அவரே விவரிக்கிறார், ’வெள்ளிக்கிழமை மதியம் ஏதோ பேசிக்கொண்டிருந்த போது “அண்ணா தமிழ்ல கொள்கையை கொண்டுவந்தா பேச நல்லா இருக்குமில்லைண்ணா” என்று தங்கை ஷர்மிளா கேட்டதும் அரை மணி நேரத்தில் ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன். அடுத்த 1 மணி நேரத்தில் வாட்ஸப் குழு + எக்ஸலில் சாப்டர்களை பிரிக்க ஆரம்பித்தேன். குழுவில் ஐம்பது நபர்கள் இருந்தாலும் என் நட்புவட்டத்தில் இருப்பவர்களும் ஏராளமானவர்கள் குட்டிக்குட்டியாக உதவினார்கள். இவர்களே இந்த வேகமான பணிக்கு முக்கிய காரணம். பெயர்கள் விடபடக்கூடாது என்று கவனமாகவே இருக்கின்றேன் ஆனாலும் விடுபடும் சாத்தியம் உள்ளது. என் கவனக்குறைவே காரணம்.

75 மணி நேரத்தில் புதிய கல்விக்கொள்கை தமிழில்… அசத்திய டீம் வொர்க்

ஜனனி, உமா (அமெரிக்கா),திவ்யா (சைக்காலஜிஸ்ட்), அறிவரசன் (சயிண்டிஸ்ட்), இலக்கிய பார்த்திபன், சந்திரு, கில்பர்ட், மணிவேல் ஜெயபிரகாஷ், இளங்கோ ராமசாமி, சிந்தியா, இந்திரா ப்ரியதர்ஷீனி, ஹரீஷ் (இன்பினிடி), கதிர், (பென்சில்) கார்திகா, அபிராமி (மதுரை), ஆசிரியர் புவனேஸ்வரி (கும்பகோணம்), எழுத்தாளர் பாலகுமாரன், நந்தா, நீச்சல்காரன், கொரோணா டாக்டர் ப்ரேம்குமார், தங்கை ப்ரியதர்ஷினி, பேராசிரியர் ஆண்ட்ரூ, பிரபு சத்தியராஜ், தங்கை ஷர்மிளா தமிழ் இலக்கியா, மச்சி சித்தார்த் (குவைத்), காயத்ரி (குவைத்)தங்கை சுசித்ரா, கார்திக் (மும்பை), தங்கை அகிலா, ஆனந்த் சத்யா, ஆசிரியர் முத்துகுமாரி, ஆசிரியர் நாதன் (பாண்டி), ஆசிரியர் சுபாஷினி (பாண்டி), ஆசிரியர் உதயலட்சுமி, ஆசிரியர் ரமேஷ், பெல்ஜியம் சிந்தன், அறிவியல் இயக்க சக்திவேல், கரோணா வென்றான் சையத், பாலச்சந்தர், பாரதி ப்ரியதர்ஷினி, கண்ணன் சிங்காரம், சத்யா, டி.எஸ்.கே, வேதநாயம், வேலூர் கிருத்திகா, அன்பு அண்ணன் ஆசாத்ஜி, ரா. புவன், அனுராதா, ஆர்த்தி தன்ராஜ், அண்ணன் ரபீக், கிருஷ்ணா, தங்கை பானு, மச்சார் ஜேகே, ஆனந்த் இளங்கோ, தேவி யோகா, ப்ரியலதா, சாம்பவி, ஷோபனா, புக்டே , நாகராஜன், நண்பர் மணிகண்டன், தம்பி முத்து, முதல்வர் அக்கா வைஷ்ணவி ராஜன்,ஆசிரியர் கார்திக் குமார்.

75 மணி நேரத்தில் புதிய கல்விக்கொள்கை தமிழில்… அசத்திய டீம் வொர்க்

இவர்களில் பெரும்பாலவர்களுக்கு மற்றவர்களை தெரியாது. 95% நபர்கள் என் நட்புவட்டத்தில் அறிமுகமான நபர்கள், சிலர் ஃபேஸ்புக்கில் பிந்தொடர்ந்தாலும் இப்போது தான் பேச ஆரம்பித்தார்கள். எல்லோரும் வேறு வேறு துறை சார்ந்தவர்கள், ஊரைச் சார்ந்தவர்கள். ஆனால் அனைவரும் இணைந்த ஒரே புள்ளி – வரும் தலைமுறையினருக்கான கல்வி.

ஸ்பெஷல் நன்றி தோழி வித்யா (உமாநாத்), செல்வமணி (நந்தா) – எங்கள் இருவரையும் தண்ணீர் தெளித்து விட்டமைக்கு’ என்கிறார்.

ஏதேனும் வலுவான ஓர் அமைப்பு செய்ய வேண்டிய ஒன்றை நண்பர்களுடன் இணைந்து வெற்றிகரமாக முடித்திருக்கிறார் விழியன்.