நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : கேரளாவிற்கு ரெட் அலர்ட் !

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி :  கேரளாவிற்கு ரெட் அலர்ட் !

தென் மேற்கு பருவமழையால் கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில் அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல தமிழகத்தில் சில மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி :  கேரளாவிற்கு ரெட் அலர்ட் !

இந்நிலையில் வடக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்தத் பகுதி காரணமாக கேரளாவில் ஓரிரு இடங்களில் அதிதீவிர கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி :  கேரளாவிற்கு ரெட் அலர்ட் !

இதன் காரணமாக கேரளாவிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழையால் பெரும் சேதங்களை சந்தித்துவரும் கேரளாவுக்கு புதிதாக ரெட் அலர்ட்  விடுக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.