வடக்கு வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மையம்!

 

வடக்கு வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மையம்!

வடக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கேரளா மற்றும் ஒரு சில வட மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் தாக்கம் தமிழகத்தில் இருந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில், இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளதால் தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடையும். 5 நாள் கனமழை பெய்யும் என்பதால் கேரளா, கர்நாடகாவிற்கு ஆரஞ்சு, குஜராத், மகாராஷ்டிராவுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு மத்திய மேற்கு, அரபிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.