டெல்லி: கொரோனாவால் உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளி குடும்பத்துக்கு ரூ. 1 கோடி!

டெல்லி: கொரோனாவால் உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளி குடும்பத்துக்கு ரூ. 1 கோடி!

டெல்லியில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளி குடும்பத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.1 கோடி கொடுத்திருப்பது பாராட்டைப் பெற்றுள்ளது.

டெல்லி: கொரோனாவால் உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளி குடும்பத்துக்கு ரூ. 1 கோடி!

இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கிய நிலையில் கொரோனா முன்களப் பணியாளர்களாக மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பார்க்கப்பட்டனர். இவர்கள் பணி காரணமாக தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால் அவர்களுக்கு அரசு தரப்பில் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ரூ.50 லட்சம் அறிவித்துவிட் ரூ.25 லட்சமாக குறைத்து வழங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்தநிலையில், டெல்லியில் உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளர்கள் குடும்பத்துக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ரூ.1 கோடியை நிவாரண நிதியாக வழங்கினார். கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த ராஜூ என்ற துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்துக்கு அவர் ஒரு கோடிக்கான காசோலையை வழங்கினார்.

டெல்லி: கொரோனாவால் உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளி குடும்பத்துக்கு ரூ. 1 கோடி!

இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “துப்புரவுத் தொழிலாளி ராஜூ தன்னுடைய பணியைச் செய்த நிலையில் அவருக்குத் தொற்று ஏற்பட்டது. மக்களைக் காப்பாற்ற அவர் உயிரிழந்தார். கொரோனா வீரரின் தியாகத்தைப் பாராட்டுகிறோம். அவரது குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கியுள்ளோம்” என்றார்.

டெல்லி: கொரோனாவால் உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளி குடும்பத்துக்கு ரூ. 1 கோடி!

டெல்லியில் 30க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் குடும்பங்கள் நிவாரண நிதி பெற முடியாமல் அவதியுறுவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் உடனடியாக நிதி உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.