பிரிட்டனில் மின்னல் வேகத்தில் பரவும் புதிய கொரோனா வைரஸ்

 

பிரிட்டனில் மின்னல் வேகத்தில் பரவும் புதிய கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. சில நாடுகளில் தொற்று பரவும் வேகம் குறைந்திருக்கிறது என்று ஆறுதல் பட்டாலும், பல நாடுகளில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வீசி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 71 லட்சத்து 72 ஆயிரத்து 352 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 40 லட்சத்து 89 ஆயிரத்து 674 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் எண்ணிக்கை 17 லட்சத்தைக் கடந்து விட்டது. தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,13,83,034 பேர்.

பிரிட்டனில் மின்னல் வேகத்தில் பரவும் புதிய கொரோனா வைரஸ்

பிரிட்டனில் கொரோனா தொற்று இரண்டால் அலை மிக மோசமாக வீசி வருகிறது. இதுவரை 20 லட்சத்து 40 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்படுள்ளனர். 67 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

இதனைத் தடுக்க, ஃபைசர் கொரோனா தடுப்பூசியை பிரிட்டனில் மக்களுக்குச் செலுத்த அனுமதிக்கப்பட்டது. உலகளவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை அனுமதித்த முதல் நாடு பிரிட்டன் தான். அதனால், அங்கு கொரோனா பரவல் குறையும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரச்சனை வேறு வடிவம் எடுத்துள்ளது.

பிரிட்டனில் மின்னல் வேகத்தில் பரவும் புதிய கொரோனா வைரஸ்

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதிவேகத்தில் கொரோனா தொற்று மற்றவர்களுக்குப் பரவி விடுகிறதாம். இதனால், என்ன செய்வது என குழம்பிப்போய் கிடக்கிறது பிரிட்டன் நிர்வாகம்.

பிரிட்டனில் பரவிவரும் அதிவேக வைரஸால் பல நாடுகள் பிரிட்டனோடு போக்குவரத்தைத் துண்டித்து விட்டன. இந்தியாவும்கூட நாளை முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளது.

இதனால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அவசரமாக ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முக்கிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.