15,223 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்!

 

15,223 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,223 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இதுவரை கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 1,06,10,883 ஆக இருப்பதாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,02,65,706 ஆக இருப்பதாகவும், 1,92,308 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் கொரோனாவால் 151 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 1,52,869 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

15,223 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் குறைந்து வருவதை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு தெளிவாக உணர்த்துகிறது. தற்போது கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருவதால், விரைவில் கொரோனா இல்லாத சூழல் உருவாகும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பாதிப்பு குறைந்தாலும் கூட, மக்கள் மாஸ்க் அணியாமல் வெளியே செல்லக் கூடாது என்றும் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இவை அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டால் மட்டுமே கொரோனா இல்லாத நிலை சாத்தியம் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது நினைவு கூரத்தக்கது.