அமெரிக்காவில் அதிகரிக்கும் புதிய கொரோனா நோயாளிகள்!

 

அமெரிக்காவில் அதிகரிக்கும் புதிய கொரோனா நோயாளிகள்!

கொரோனா உலகம் எங்கும் பரவினாலும் அமெரிக்காவில் விரைவாகப் பரவியது. அது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அலட்சியமான கையாளல் முறையால் என்ற விமர்சனமும் உண்டு.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 91 லட்சத்து  76 ஆயிரத்து 103 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 93 லட்சத்து 79 ஆயிரத்து 089 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 02 ஆயிரத்து 946 பேர்.

அமெரிக்காவில் அதிகரிக்கும் புதிய கொரோனா நோயாளிகள்!

அமெரிக்காவில் தற்போதுவரை மொத்த பாதிப்பு 82,16,315. அவர்களில் குணம் அடைந்தவர்கள் 53,20,139 பேர். மரணம் அடைந்தவர்கள் 2,22,717 பேர். இறப்பு விகிதம் 4 சதவிகிதமாக இருக்கிறது.

அமெரிக்காவில் ஜூலை 24-ம் தேதி ஒரே நாளில் 78,938 பேர் புதிய நோயாளிகளாக உறுதிசெய்யப்பட்டனர். அதற்கடுத்து கொஞ்சம் கொஞ்சமாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. செப்டம்பர் 25 –ம் தேதி 25 ஆயிரம் பேர் மட்டுமே புதிய நோயாளிகளாக்க் கண்டறியப்பட்டனர். முந்தைய வார சூழலைப் பார்க்கையில் இது மிகவும் குறைவே.

அமெரிக்காவில் அதிகரிக்கும் புதிய கொரோனா நோயாளிகள்!

படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்த புதிய நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக திடீரென்று அதிகரித்துகொண்டிருக்கிறது. அக்டோபர் 9-ம் தேதி 60,997 பேராக அதிகரித்தது. நேற்றைய எண்ணிக்கையும் 66 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.

புதிய நோயாளிகளின் எண்ணிக்கையைப் போலவே இறப்பு எண்ணிக்கையும் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக உலகளவில் இந்தியாவில்தான் ஒரே நாளில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. நேற்றைய நிலவரப்படி, இந்தியாவை விடவும் அதிகமாக அமெரிக்காவில் இருந்தது.