தடுப்பூசி தொடங்கி ஒரு மாதமாயிற்று… அதிகரிக்கும் புதிய கொரோனா நோயாளிகள் – அச்சத்தில் அமெரிக்கா!

 

தடுப்பூசி தொடங்கி ஒரு மாதமாயிற்று… அதிகரிக்கும் புதிய கொரோனா நோயாளிகள் – அச்சத்தில் அமெரிக்கா!

கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப் படைத்து வருகிறது. உலகளவில் 9 கோடியே 50 லட்சத்தை பாதிப்பு கடந்துவிட்டது. இவற்றில் 6 கோடியே 78 லட்சம் பேர் குணமடைந்து விட்டனர். இறப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்து விட்டது.

கொரோனா பாதிப்பின் உச்சம் அமெரிக்காவில் தலைவிரித்தாடுகிறது. அமெரிக்காவில் இன்றைய தேதி வரை 2 கோடியே 43 லட்சத்து 6 ஆயிரத்து 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 4 லட்சத்து 5 ஆயிரத்து 261 பேர் மரணமடைந்துள்ளனர்.

தடுப்பூசி தொடங்கி ஒரு மாதமாயிற்று… அதிகரிக்கும் புதிய கொரோனா நோயாளிகள் – அச்சத்தில் அமெரிக்கா!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மிகத் தீவிரம் காட்டி வருகிறது அந்த நாட்டு அரசு. பலத்த சோதனைகளுக்குப் பிறகு சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி அமெரிக்காவில் முதன் முதலாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

அமெரிக்காவில் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை முதலில் அங்கு அவசரகால பயன்பாட்டுக்காக அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பிறகு மாடர்னா தடுப்பூசியும் அங்கு நோயாளிகளுக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் முன்கள வீரரான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அந்த நாட்டு அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது.

தடுப்பூசி தொடங்கி ஒரு மாதமாயிற்று… அதிகரிக்கும் புதிய கொரோனா நோயாளிகள் – அச்சத்தில் அமெரிக்கா!

இன்றிலிருந்து பார்த்தால் சுமார் ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது கொரோனா தடுப்பு ஊசி பணிகள் ஆரம்பித்து. ஆனால் இப்போது வரை அங்கு புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. நேற்றைக்கு மட்டுமே அங்கு இரண்டு லட்சத்து 2 ஆயிரத்து 767 பேர் புதிய கொரோனா நோயாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். நேற்று மட்டுமல்ல தொடர்ச்சியாகவே தினந்தோறும் இரண்டு லட்சத்தை கடந்து விடுகிறது புதிய நோயாளிகளின் எண்ணிக்கை.

நேற்று மட்டுமே 3 ஆயிரத்து 377 பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்காவை பொருத்தவரை கலிபோனியா மாகாணம்தான் நோய் தொற்றால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டது. கலிபோனியாவுக்கு அடுத்து டெக்ஸாஸ், ஃப்ளோரிடா, நியூயார்க் ஆகிய மாகாணங்கள் இருக்கின்றன.

இழப்புகளை பொருத்தவரை நியுயார்க்கில்தான் அதிக இழப்புகள். நியூயார்க் மாகாணத்தில் 40 ஆயிரத்து 800 பேர் மரணமடைந்துள்ளனர். கலிபோர்னியாவில் 33 ஆயிரத்து 369 பேர் மரணமடைந்துள்ளனர். தடுப்பூசி நடைமுறையில் வந்த பிறகும் புதிய நோயாளிகள் எண்ணிக்கை குறையாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசி தொடங்கி ஒரு மாதமாயிற்று… அதிகரிக்கும் புதிய கொரோனா நோயாளிகள் – அச்சத்தில் அமெரிக்கா!

இம்மாதம் 20 ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ளார் ஜோ பைடன். அவருக்கு இருக்கும் முதல் சவால் கொரோனா கால பேரிடர்களையும் கொரோனா வைரஸ் தொற்றுகளைக் கட்டுப்படுத்துவதும்தான். அதைக் கடந்தும் கொரோனாவால் அமெரிக்காவில் பொருளாதாரம் மிகவும் சீரழிந்து இருக்கிறது.

அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. இதை எப்படி கையாளப் போகிறார் என்கின்ற விவாதங்கள் அமெரிக்காவில் தொடங்கிவிட்டன. அதற்கு ஜோ பைடன் தரப்பில் சொல்லப்படுவது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதுகாக்க 1.9 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவில் அதற்காக ஒரு திட்டத்தை வடிவமைத்து உள்ளாராம்.

இந்தத் திட்டத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் அனுமதி கொடுத்தால் அமெரிக்காவில் வாழும் ஒவ்வொருவருக்கும் தலா 1400 டாலர் கிடைக்கும் இந்திய மதிப்பில் பார்த்தால் சுமார் ஒரு லட்சம் நிதி உதவி ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் அதேபோல நோய் தொற்றால் வேலை இழந்தவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் 300 டாலரிலிருந்து 400 டாலர் வரை உதவி தொகை கொடுக்கப்படும் என்றும் அந்த திட்டத்தில் இருக்கிறதாம் இவையெல்லாம் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என்பது போகப்போகத்தான் தெரியும்.