100 நாட்கள் கழித்து புதிய கொரோனா நோயாளி – நியூசிலாந்து மீண்டும் லாக்டெளன்

100 நாட்கள் கழித்து புதிய கொரோனா நோயாளி – நியூசிலாந்து மீண்டும் லாக்டெளன்

கொரோனாவைப் போல மாபெரும் பேரிடரை இதற்கு முன் உலகம் சந்திருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், கடந்த ஒன்பது மாதங்களாகத் தொல்லை தருகிறது கொரோனா வைரஸ் தாக்குதல்தான். சென்ற ஆண்டு சீனாவில் தொடங்கிய இந்தத் துயரம் இன்னும் முடிந்தபாடில்லை.

உலகளவில் இரு கோடி பேருக்கு அதிகமான நபர்கள் இந்தக் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு நாடுகள் ஒரு லட்சம் பேருக்கு அதிகமானவர்களை இழந்துள்ளது.

100 நாட்கள் கழித்து புதிய கொரோனா நோயாளி – நியூசிலாந்து மீண்டும் லாக்டெளன்

பல நாடுகளில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இலங்கையில் நேற்றுமுதல் சில கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளே திறந்துவிட்டார்கள். இங்கிலாந்தில் அடுத்த மாதம் பள்ளிகள் திறக்க திட்டமிட்டுள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்தான் கடந்த 100 நாட்களாக புதிய கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை என நியூசிலாந்து நாடு அறிவிக்கிறது. ஆனால், 102 வயது நாளில் அங்கே புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

100 நாட்கள் கழித்து புதிய கொரோனா நோயாளி – நியூசிலாந்து மீண்டும் லாக்டெளன்

இதனால் அந்நாட்டு அரசு உடனே பணிகளை முடுக்கி விட்டிருக்கிறது. எப்படி அவருக்கு நோய்த் தொற்றியது என்பதை ட்ரேஸ் செய்யும் பணியைத் துரிதப்படித்தியிருக்கிறது.

புதிய நோய்த் தொற்று கண்டறியப்பட்டதால், மீண்டும் லாக்டெளன் அந்நாட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.