’15 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு’ : முக்கிய தகவல் இதோ!

 

’15 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு’ : முக்கிய தகவல் இதோ!

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,42,841 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 15,158 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாகவும் ஒரே நாளில் 175 பேர் கொரோனாவுக்கு பலியானதால் மொத்த உயிரிழப்புகள் 1,52,093 ஆக அதிகரித்திருப்பதாகவும் இதுவரை 1,01,79715 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்திருக்கும் நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,11,033 ஆக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

’15 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு’ : முக்கிய தகவல் இதோ!

கொரோனா வைரஸுக்கு எதிரான பல மாத போராட்டம் முடிவுக்கு வரப் போகிறது. சீரம் நிறுவனம் உருவாக்கிய கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசியும் இன்று முதல் செலுத்தப்படவிருக்கிறது. நாடு முழுவதும் 2,934 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கவிருக்கிறது. இதனை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.

’15 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு’ : முக்கிய தகவல் இதோ!

முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முடிவடைந்து, பின்னர் பொதுமக்களுக்கு செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மூலம், 15,158 என்ற இந்த புதிய கொரோனா பரவலின் எண்ணிக்கை பூச்சியமாகி கொரோனா வைரஸ் இல்லாத நாடாக இந்தியா உருவாக வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.