ஆவடி மாநகராட்சியின் புதிய ஆணையர் நியமனம்!

 

ஆவடி மாநகராட்சியின் புதிய ஆணையர்  நியமனம்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,949 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 62 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.18 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,141 ஆக அதிகரித்துள்ளது.

ஆவடி மாநகராட்சியின் புதிய ஆணையர்  நியமனம்!

குறிப்பாக சென்னை மாநகராட்சியில் 55,969 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 21,681 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 33,441 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் ஆவடி பகுதியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்தப்படி உள்ளது. நேற்று முன்தின நிலவரப்படி, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை, 640ஆக உயர்ந்தது. சிகிச்சை பலனின்றி, 22 பேர் உயிரிழந்தனர். இன்பு கொரோனா பாதிக்கபட்டவர்களின் விவரங்கள் மாநகராட்சிக்கு சரிவர கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.

ஆவடி மாநகராட்சியின் புதிய ஆணையர்  நியமனம்!

இந்நிலையில் ஆவடி மாநாகராட்சியின் புதிய ஆணையராக நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் விடுமுறையில் சென்றுள்ள நிலையில் தற்போது நாராயணனை புதிய ஆணையராக தமிழக அரசு நியமித்துள்ளது.